• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-10 15:22:23    
கடைசி ஆசை

cri

கடைசி ஆசை

   

மரணதண்டனை பெறும் குற்றவாளிகளிடம் கடைசி ஆசை கேட்டு அதனை இயன்றவரை நிறைவேற்றி வைப்பார்கள். குற்றவாளியின் கடைசி ஆசைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதைபோல வாழ்கின்ற அனைவரின் பொதுநலன் கொண்ட நேர்மறையான ஆசைகளை நிறைவேற்ற முன்வந்துவிட்டால் உலகு இனிமையாகிவிடும். 24 வயதான Li Xiao'e என்ற பெண்மணி 13 ஆண்டுகளாக உயிர் கொல்லி நோயான leukemia வகை புற்றுநோயால் படுத்தப்படுக்கையாகி போராடி கொண்டிருக்கிறார். இந்நிலையிலும் தனை ஈன்ற பெற்றோருக்கு ஒரு அழியா நினைவை விட்டு செல்வதை தனது கடைசி ஆசையாக கொண்டிருக்கிறார். அதாவது தனது வயதுக்கு ஒத்த வாலிபர்களை சந்தித்து பேசி பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்காதபோதும், தான் இறப்பதற்கு முன்னர் மணமகளாகி, திருமண புகைப்படத்தை பெற்றோருக்கு விட்டு செல்ல வேண்டுமென்பதே அந்த ஆசை. இந்நிலையில் இறந்தபிறகு தனது உடல் உறுப்புகளை கொடையாக வழங்குவதற்கு சம்மதம் தெரிவிக்கும், உடன்படிக்கையில் Li Xiao'e அண்மையில் கையெழுத்திட்டார். அவருடைய இந்த பெருந்தன்மையை அறிந்து நெகிந்துபோன உள்மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்தை சேர்ந்த Hohhot கல்லூரி மாணவர் Chen அவருடைய ஆசையை நிறைவேற்ற தீர்மானித்துள்ளார்.

குழந்தைகள் உரிமை

J.K. Rowling என்றால் உலகமே அறிந்திருக்கும் பிரபலம். உலகளவில் சிறுவர்களை கவர்ந்திழுத்த Harry Potter புதின புத்தக தொடர்களை எழுதி புகழ் பெற்றவர். அண்மையில் தனது மகனின் புகைப்படம் வெளியான Big Pictures புகைப்பட நிறுவனத்தின் வெளியீடுகளை தடை செய்ய வேண்டுமென அவர் நீதி மன்றத்தை அணுகினார். இலண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. Rowling தன்னுடைய புதினங்களால் புகழ் பெற்றிருந்தாலும், தனது குழந்தைகளுக்கு ஊடக பார்வைகளுக்கு அப்பாற்பட்ட சாதாரண குடும்ப வாழ்வை வழங்குவதாகவும், அனுமதியில்லாமல் மறைமுகமாக எடுக்கப்படும் புகைப்பட வெளியீடுகள் குழந்தைகளின் பாதுகாப்பையும், வாழ்வையும் பாதிக்கும் என்றும் அவர் சார்பாக வாதாடப்பட்டது. இவ்வழக்கில், ஊடக புகழ் பெறாத பெற்றோர் தனது குழந்தைகளின் புகைப்படம் ஊடகங்களில் வரக்கூடாது என்று நினைப்பதை போல, ஊடகங்களில் முக்கியமான நபர்களாக வாழும் பெற்றோருக்கும் நினைக்கும் உரிமையுண்டு என்று, Rowling க்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் தனிப்பட்ட வாழ்விலான உரிமைகளில் மிக அதிகமான பயன்களை இந்த தீர்ப்பு கொண்டு வந்துள்ளதாக Rowling சார்பாக வழக்காடிய வழக்கறிஞர் Keith Schilling தெரிவித்துள்ளார்.