சின் யாங் நகரிலுள்ள லீங் சான் கோயில்
cri
சீனாவின் மையப்பகுதியிலுள்ள He nan மாநிலத்தின் சின் யாங் நகர், தெளிந்த நீரையும் பசுமை அடர்ந்த மலையையும், சீரான காலநிலையையும் கொண்ட இடமாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறுடைய பண்டைய கோயிலான லீங் சான் கோயில், கோடைக்கால வாசஸ்தலமான ஜிகுங் மலை, சீனாவின் புகழ்பெற்ற தேயிலையான சின்யாங் மெளசியான் என்னும் தேயிலை ஆகியவை சின்யாங்கில் காணப்படலாம். லீங்சான் கோயில், ஜிகுங் மலை ஆகியவற்றைத் தவிர, சின்யாங்கில் நான்வான் ஏரி உள்ளது. இவ்வியற்கைக் காட்சி மண்டலம், மலை, ஏரி, காடு, தீவு ஆகியவற்றைக்
 கொண்டுள்ளதால், புகழ்பெற்றது. அதில் 61 தீவுகள் அமைந்துள்ளன. பறவைத் தீவில், எங்கெங்கும் பறவைகளைக் காணலாம். அவற்றின் ஒலியைக் கேட்கலாம். ஆண்டுதோறும், சுமார் ஒரு லட்சம் இடம்பெயரும் பறவைகள், இங்கு வந்து செல்கின்றன. நான்வான் ஏரி, இயற்கையான உயிர்வாயு அகம் ஆகும். அதன் மொத்த பரப்பளவில், காட்டு பரவல், 75 விழுக்காடு வகித்துள்ளது. சாங் ச்சி என்னும் பயணி, மே தின விடுமுனறயை பயன்படுத்தி, வான்வான் ஏரிக்கு சிறப்பாக சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் கூறியதாவது: படகு மூலம், நான்வான் ஏரியைப் பார்வையிட்டு, ஏரியிலுள்ள பல தீவுகளைப் பார்த்தோம். இங்கு இயற்கைக் காட்சி மிகவும் அழகானது என்று உணர்ந்துகொள்கின்றோம்.
 சின்யாங் நகரத்தில், அழகான இயற்கைக் காட்சிகளும், வரலாற்று காட்சித் தலங்களும் உள்ளது மட்டுமல்ல, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் புகழ்பெற்ற மிகப் பசுமையான தேயிலையான—சின்யாங் மெள சியான் உள்ளது. போதியளவிலான சூரிய ஒளி மற்றும் மழையைக் கொண்டதால், இப்பிரதேசம் தேயிலை மரம் வளர்ப்பதற்குப் பொருத்தமானது. 1992ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் ஏப்ரல் திங்களில் சின்யாங் நகரம் தேயிலை பண்பாட்டு விழாவை நடத்தி வருகிறது. தேயிலை பொருட்காட்சி, தேயிலை கலை நிகழ்ச்சி, பொருளாதார மற்றும் வர்த்தகக் கருத்தரங்கு முதலிய பல நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இவ்வாண்டின் தேயிலை பண்பாட்டு விழாவில், சின் யாங் சியு பொஃங் தேயிலை தொழில் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் சாங் சிங் அம்மையார் கூறியதாவது:
 கனேடிய தேயிலை வணிகர் ஒருவர், எமது தேயிலையை பலமுறை பார்வையிட்டு சோதனை செய்தார். நல்ல தரத்தை கொண்டிருப்பதால் எமது தேயிலையைத் தேர்ந்தெடுத்து வாங்கினார் என்றார் அவர். தற்போது, சின்யாங் மெள சியான் என்ற பகந்தேயிலையின் உற்பத்தியில், தயாரிப்பு, விற்பனை மற்றும் கலை நிகழ்ச்சி ஒருமைப்பாட்டு முறைமையாக உருவாகியுள்ளது. தேயிலை பண்பாட்டு விழாவில், தேயிலையின் தயாரிப்பு போக்கைப் பார்ப்பது மட்டுமல்ல, தரமான சின்யாங் மெள சியான் தேயிலையை வாங்கவும் முடியும். பயணி சென் பாஃ, இந்த தேயிலையை வாங்க, ஹுபெய் மாநிலத்திலிருந்து வந்தார். அவர் கூறியதாவது:
 சின்யாங் மெள சியான் என்பது, சீனாவின் புகழ்பெற்ற பதந்தேயிலையாகும். அதன் வண்ணம், பசுமையாக இருக்கிறது. வடிவம் அழகானது. தேனீரைக் குடித்து, அனுபவிப்பதாக உணர்ந்தேன். ஆண்டுதோறும், தேயிலை பண்பாட்டு விழாவில் தேயிலை வாங்கி, வீட்டுக்குக் கொண்டு வந்து, குடும்பத்தினர் மற்றும் நணபர்களுடன் பகிர்ந்து குடிகின்றேன் என்றார் அவர்.
|
|