ஜூலை 10ம் நாள் நண்பகல் 12 மணி வரை, சீனாவின் பல்வேறு நிலை அரசாங்கங்கள் மொத்தம் 5904 கோடியே 20 இலட்சம் யுவானை மீட்புதவித் தொகையாக ஒதுக்கீடு செய்துள்ளன. அரசவை நிலநடுக்க பேரிடர் நீக்க தலைமையகத்திடமிருந்து அதிகாரம் பெற்ற, சீன அரசவையின் செய்தி துறை பணியகம், இன்று இத்தகவலை வெளியிட்டது.
பொது துறை அமைச்சகத்தின் புள்ளிவிபரங்களின் படி, ஜூலை 10ம் நாள் நண்பகல் 12 மணி வரை, சிச்சுவான் வென்சுவான் நிலநடுக்கத்தில் 69 ஆயிரத்து 197 பேர் உயிரிழந்தனர். 18 ஆயிரத்து 377 பேர் காணாமல் போயினர்.
நிதி அமைச்சகத்தின் அறிக்கையின் படி, ஜூலை 10ம் நாள் நண்பகல் 12 மணி வரை, சீனா பெற்றுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடைத்தொகை மற்றும் பொருட்களின் மதிப்பு, 5700 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு, 2050 கோடி யுவான் மதிப்புள்ள நிதியையும் பொருட்களையும் வழங்கியுள்ளது.
|