• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-11 14:04:19    
சீனாவின் தூலோங் இனம்

cri

சீனாவின் தூலோங் இன மக்கள், முக்கியமாக யுன்னான் மாநிலத்தின் குங் சான் மலையின் தூலோங் ஆற்றுப் பள்ளத்தாக்கில் வாழ்கின்றனர். இவ்வினத்தின் மக்கள் தொகை, 6800 ஆகும். நவ சீனா நிறுவப்பட்ட போது இருந்ததை விட, இவ்வெண்ணிக்கை, 3 ஆயிரத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. உட்புறப் பிரதேசத்திலிருந்து தூரமான இடங்களில் வாழ்வதால், 20ம் நூற்றாண்டின் மையப் பகுதியில், தூலோங் இனம், ஆதிகால சமூகத்தின் கடைசி கட்டத்தில் இருந்தது. அவர்கள் முக்கியமாக விவசாயம், வேட்டை, பழங்கள் திரட்டல் முதலியவற்றில் ஈடுபட்டனர்.

 சொந்தமாக நெசவு செய்த துணிகளை அணிந்தனர். சிலர், இலைகள் மற்றும் விலங்குத் தோல்களை அணிந்தனர். குளிர்காலம், தூலோங் இன மக்கள் வேட்டையாடுகின்ற தலைசிறந்த காலமாகும். வேட்டையாடி பெற்ற காட்டு மாடுகள், குளிர்காலத்தில் அவர்களின் முக்கிய உணவாகும். தூலோங் ஆற்றில், அதிக வகை மீன்கள் வாழ்கின்றன.தேனீயின் கூட்டுப்புழுக்கள், தூலோங் இனத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த உணவு வகையாகும். இவ்வினத்தில், நூறு வயதிற்கு மேலான முதியவர்கள் மிக அதிகம். இந்தக் கூட்டுப் புழுக்களைச் சாப்பிடுவது, இதற்கு காரணமாகும் என்று தெரிகிறது.

முன்பு, தூலோங் இன மக்கள் இயற்கை மற்றும் பல கடவுள்களை வழிபட்டனர். புத்தாண்டை கொண்டாடும் kaquewa என்ற விழா, மதத்துடன் தொடர்புடையது. ஒவ்வொரு ஆண்டின் கடைசி திங்களில் இவ்விழாவைக் கொண்டாடுவது அவர்களது வழக்கம். தூலோங் இன மக்களின் அழைப்பிதழ் அளிக்கும் வழிமுறை, மிகச் சிறப்பானது. அழைப்பிதழுக்குப் பதிலாக, ஒரு மரத் துண்டு, அழைப்பை வெளிப்படுத்துகிறது. மரத் துண்டு, விருந்தினரின் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். திருமணம் செய்த பின், குழந்தை பெற்றால், அந்த குழந்தையின் தந்தை தனது மாமியாருக்கு, மாடு, கத்தி, இரும்பு வாலை இவற்றில் ஏதாவது ஒன்றை முதலியவற்றை வழங்கி நன்றி தெரிவிக்கிறார்.