• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-11 17:45:29    
56 தேசிய இனங்களின் சிறுவர் தூதர்களின் பெய்சிங் பயணம் 2

cri

கூடைப்பந்து, கயிறுகுதித்தல், கால்பந்து போன்ற விளையாட்டுகளை நான் விளையாட விரும்புகின்றேன் என்றார்.

பெய்சிங் ஒலிம்பிக் மற்றும் ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாட்டு மையமான பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு அமைப்புக் குழுவின் மாளிகையில், ஒவ்வொரு இனத்தின் இந்த சிறுவர்கள் தூதர்கள், தாங்கள் மிகவும் எதிர்பார்த்து விரும்பிய நினைவுச் சின்னங்களை பெற்றுள்ளனர். சிச்சுவான் dan ba மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய 13வயது திபெத் இன சிறுமி duo ji xia mu, பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டிகளின் பொறுப்பாளர்களுக்கு வெள்ளையான Khatag வழங்கினார். அதே வேளையில், பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டிக் குழுவுக்கு இரு ஊனமுற்ற உடன் பிறந்தசகோதரிகள் அவர்களது கால்களால் பூத்தையல் செய்த "ஓர் உலகம், ஒரு கனவு"என்ற படைப்பை அன்பளிப்பாக வழங்கினார்கள். சிச்சுவானின் Yi மற்றும் yun nanனின்daiஇனங்களின் குழந்தைகள், அவர்களது அன்பளிப்புப் பொருட்களை வழங்கி, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நடவடிக்கைகளை மேற்கொண்ட இறுதி நாளில் 56 இனங்களின் சிறுவர் தூதர்களின் பெய்சிங் விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த குழு பயணத்துக்கான பொறுப்பு ஏற்கும் பெய்சிங் ஒலிம்பிக் அமைப்பு நிறைவு விழாவை மேற்கொண்டது. அந்த விழாவில், அந்த சிறுவர் தூதர்கள், தத்தமது இனத்தின் வண்ண உடைகள் அணிந்து, ஆடல் பாடல்களை முறையாக வழங்கினர். தங்களது இன ஆடல்களால், வாழ்க்கையின் மீதான அன்பை குழந்தைகள் வெளிப்படுத்தினர். அவர்களது வளமான இனிய இளைய குரலால், கனவை நாடும் எண்ணத்தை வெளிப்படுத்தினர். Ji nuo இனத்தின் சிறுவர் தூதர் dong fang கூறியதாவது

கடந்த சில நாட்களில், பெய்சிங்கில் மகிழ்ச்சியுடன் விளையாடி, பல நல்ல நண்பர்களை நான் அறிந்து கொண்டேன். எனது நல்ல நண்பர்களோடு, ji nuo மலைக்கிராமத்துக்கு வந்து விளையாட விரும்புகிறேன் என்றார்.

இந்த நடவடிக்கையில், சிறுவர்களான தூதர்களின் மீதான பணியாளர்களின் கவனிப்பையும், சிறிய தூதர்களுடையிலான பரஸ்பர கவனத்தையும் காண முடிந்தது. சிச்சுவான் gan zi சோவின் dan ba மாவட்டத்திருந்து வந்திருந்த திபெத் இன ஊனமுற்ற சிறுமி தூதர் duo ji xia mu கூறியதாவது

இந்த பயணத்தில் ஏற்பட்ட அறிமுகத்தின் மூலம், பல நண்பர்களை நான் அறிந்து கொண்டேன். அவர்களில் கை ஊனமுள்ள chen gulu என்பவர், தனது வாழ்க்கையின் மீது நம்பிக்கை கொண்டு வருகின்றார். எனது வலது கையால், எழுத்துகளை எழுத முடியும். நான், படிக்க பாடுபட்டால், எதிர்காலத்தில் வளர்ச்சி அடைந்த மருத்துவ சிகிச்சை மூலம், என்து கைகளைக் குணப்படுத்தலாம். அதற்காக, நான், வங்கியில் பணம் சேமித்துவைக்க வேண்டும். தேவைப்படும் குழந்தைகளுக்கு நான் உதவி செய்ய விரும்புகிறேன் என்று கூறினார். இந்த நடவடிக்கையில், தமது தேசிய இன ஆடைகளை சிறுவர் தூதர்கள் எப்போதும் அணிந்திருந்தனர்.

இசை 6............

இந்த முறை, ta jike இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நான், இங்கு வந்து, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை பற்றி பல அறிவுகளை முழுமையாக தெரிந்து கொண்டேன். அடுத்து, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எவ்வளவு சிறப்பானது என்பது பற்றி, எனது நன்பர்கள் உற்றார் உறவினர்களிடம் நான் எடுத்து சொல்வேன். அவர்கள், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பார்வையாளர்களாக கலந்து கொள்ளாலம் அல்லது பிற வழிமுறைகள் மூலம் ஆதரிக்கலாம் என்றார்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு நடத்தப்பட்ட இப்பயணம் நிறைவடைந்தாலும், அது இந்த சிறுவர் தூதர்களின் மனதில் ஆழமான மனப்பதிவுகளை ஏற்படுத்தியுள்ளன. அவர்கள் பெய்சிங்கிற்க்கு வருவது இதுவே முதன் முறையாகும். தேசிய அரங்கான பறவை கூட்டையும் நீச்சல் அரங்கான நீர் கன சதுரத்தையும் பார்ப்பதும், டியென் அன் மன் சதுக்கத்தில் கொடி ஏற்றும் விழாவைப் பார்ப்பதும், Mcdonald's உணவுகளை சாப்பிடுவதும் இதுவே முதன் முறை. இவ்வாறு தங்கள் வாழ்வில் முதல் முறை நடைபெற்ற நிகழ்வுகள் அதிகமாக இருப்பதால், இப்பயணம், அவர்களது வாழ்க்கையில் பெரு மதிப்புள்ள தாக்கத்தை ஏற்படுத்துவது உறுதி.