• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-11 09:52:47    
உறுதியும் வலுமையும் கொண்ட பன் வென் சின்

cri
ஷுய் இனம், மக்களின் மனதில் அதிக எண்ணங்கள் ஏற்படச் செய்யக் கூடிய ஒரு சிறுபான்மை தேசிய இனமாகும். ஷுய் இன மங்கை பன் வென் சின்னை சந்தித்த போது, தெளிவான ஏரி போல் காணப்பட்ட அவரது அழகான கண்களில், அவரது எளிமை மற்றும் கனிவான இதயத்தையும் அவரது உற்சாகம் மற்றும் மன உறுதியையும் நீங்கள் காணலாம்.

சிறுபான்மை தேசிய இன ஆசிரியை பன் வென் சின், சிறுபான்மை தேசிய இனக் கிராமம் ஒன்றில் பிறந்தார். Pop இசையை விட, பழஞ்சமுதாய பாணியுடைய நாட்டுப்புறப் பாடல்களை அவர் அதிகம் விரும்புகிறார். இடைநிலை பள்ளியி்ல், தலைசிறந்த சாதனை பெற்ற அவர், எதிர்பாராத விதமாக, ஆசிரியர் பயிற்சித் துறையைத் தெரிவு செய்தார். படிப்பை முடித்து சொந்த கிராமத்துக்குத் திரும்பிய அவர், கிராம ஆசிரியையாக மாறியுள்ளார். "கிராமப்புறம் எப்போதும் பின்தங்கிய நிலையில் இருக்கப் போவதில்லை. அறிவே ஆற்றலாகும் என மேலதிக கிராமப்புறக் குழந்தைகள் அறிந்து கொள்ளச் செய்ய விரும்புகின்றேன்" என்றார் அவர்.
தலைசிறந்த செயல்பாட்டுத் திறன் மூலம், லி போ மாவட்டத்தில் நன்கொடை உதவியுடன் அமைக்கப்பட்ட ஒரு துவக்கப் பள்ளிக்கு சீன

மொழி ஆசிரியையாக அவர் அனுப்பப்பட்டார். முதன்முறையாக லி போ மாவட்ட நகரைச் சென்றடைந்த போது, துவக்கப் பள்ளியில் கணினியைப் பயன்படுத்தி படங்கள் மூலம் பாடம் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கண்டறிந்தார். கணினியைப் பயன்படுத்தாத அவருக்கு இது மிகவும் கடினமாக இருந்தது. எனவே, வங்கிக்கடன் மூலம் கணினி ஒன்றை அவர் வாங்கி, தொடர்பான அறிவுகளை கற்றுக் கொள்ளத் துவங்கினார்.
கணினி பயன்பாட்டைக் கற்றுக் கொண்ட அவர், இணையதளத்தில் பெய்ஜிங் ஒலிம்பிக் தீபம் ஏந்துபவர்களுக்கான தெரிவு பற்றிய செய்தியை அறிந்து கொண்டார். தனது விபரங்களை அவர் அனுப்பினார். இந்தத் தெரிவில் கலந்து கொண்ட காலம் கடினமாக இருந்தது. லி போ மாவட்டத்திலிருந்து பேருந்து மூலம் குய் யாங் நகரைச் சென்றடைவதற்கு 6 மணிநேரத்துக்கு மேல் தேவைப்பட்டது. அடுத்த நாளுக்கான

பாடங்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், அன்றே லி போ மாவட்டத்துக்கு பன் வென் சின் விரைந்து திரும்ப வேண்டும். வலியில்லாமல் பயன் பிறக்காது. இறுதியில் ஒலிம்பிக் தீபம் ஏந்தும் நபராக அவர் தெரிவு செய்யப்பட்டார்.
கை லி நகரின் ஒலிம்பிக் தீபம் ஏந்தும் நபராக பன் வென் சின் மாறியதை அறிந்து கொண்ட பின், அவரது மாணவர்கள் அனைவரும் அவரிடம் தொடர்பான விடயங்களை மகிழ்ச்சியுடன் கேட்டனர். உரிய நேரத்தில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை மைய அம்சமாகக் கொண்டு கட்டுரை எழுதும் பாடத்தை மாணவர்களுக்கு அவர் ஏற்பாடு செய்தார். ஒலிம்பிக் தீபம் ஏந்துபவர் தங்களுக்கு அருகில் இருந்ததன் காரணமாக, மாணவர்கள் எழுதிய கட்டுரைகளில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மீதான ஆர்வமும் எதிர்பார்ப்பும் மிகவும் உண்மையாக இருந்தன.

கை லி நகரம் அழகான ஓர் இடமாகும். அங்கு சிறுபான்மை தேசிய இன மணம் நிறைந்து காணப்படுகிறது. தாம் சிறுபான்மை தேசிய இனத்தைச் சேர்ந்தவராக இருப்பதால், கை லி மீதான எதிர்பார்ப்பு தனது மனதில் நிறைந்து காணப்படுகிறது என்று கை லி நகரம் பற்றிக் குறிப்பிடுகையில் பன் வென் சின் கூறினார். கிராமப்புறக் குழந்தையாக இருந்து கிராமிய ஆசிரியையாக மாறியது, கிராமப்புறத்திலிருந்து மாவட்ட நகரத்துக்குச் சென்றது, பன் வென் சின் தனது மாணவர்களுடன் இணைந்து பெற்றுள்ள சாதனை ஆகியவை அனைத்தும், கிராமப்புறம் எப்போதும் பின்தங்கிய நிலையில் இருக்கப் போவதில்லை என்று பன் வென் சின் கூறிய வாசகத்தைக் கோடிட்டுக் காட்டியுள்ளன.