• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-11 09:55:49    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு சீனாவிலுள்ள ரஷிய தூதர்களின் நல்வாழ்த்துக்கள் 2

cri
விளையாட்டு, இளைஞர்களுக்கிடையிலான நட்பை அதிகரிக்கும் முக்கிய வழிமுறையாகும். இளைஞர்கள் அமைதியாக பழகி, பரஸ்பரம் புரிந்து கொண்டு, ஒத்துழைப்பை உருவாக்கினால், முழு உலகில் மக்களின் வாழ்க்கை மேலும் பாதுகாப்பாகவும் அருமையாகவும் மாறும். எனவே, இளைஞர்களுக்கிடையிலான நட்பையும் பரஸ்பர புரிந்துணர்வையும் அதிகரிப்பது என்பது நமது பொதுக் கடமையாகும் என்றார் அவர்.

விளையாட்டை மிகவும் நேசிப்பதால், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்டத்தில் ஏற்பட்ட இணைப்பற்ற காரணிகளுக்கு ராசோவ் கண்டனம் தெரிவித்தார். அமைதி, நட்பு, பரஸ்பர புரிந்துணர்வு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒலிம்பிக் புனிதத் தீபம், அரசியல் தலையீட்டால் பாதிக்கப்படக் கூடாது என்று அவர் கருதுகின்றார். உலகில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்டத்தில் மக்கள் வெளிப்படுத்திய உற்சாகம் ஒலிம்பிக் தீபத்தின் புனிதத் தன்மையை எடுத்துக் காட்டியுள்ளது என்றும் ராசோவ்

கூறினார். இத்தீபத் தொடரோட்டம் சுமூகமாக நடைபெற்றது. செயின்ட் பீட்டஸ்பெர்க் நகரில் பெய்சிங் ஒலிம்பிக் வெளியாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்டத்தில், இன்றியமையாத பாதுகாப்பு நடவடிக்கைகளை ரஷிய அரசு மேற்கொண்டது. இந்நடவடிக்கைக்கு செயின்ட் பீட்டஸ்பெர்க் நகரவாசிகள் மிகப் பெரும் அக்கறையை காட்டினர். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பற்றிய அனைத்து நிகழ்ச்சிகளும் ரஷியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன என்றார் அவர்.

கடந்த 20 ஆண்டுகளில், ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில், சீனாவும் ரஷியாவும் நல்ல நண்பர்கள் மற்றும் எதிர்த்து போட்டியிடும் வீரர்களாகும். பதக்க வரிசையின் முன்னணியில் இரு நாடுகளின் பெயர்கள் காணப்படுகின்றன. 2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், சீனா பெற்ற தங்கப் பதக்க எண்ணிக்கை ரஷியா பெற்றதை விட முதன் முறையாக தாண்டியது. பதக்க வரிசையின் இரண்டாவது இடத்தை ரஷியா பெற்றது.