சீன அரசவையின் செய்தி துறை பணியகம் வெளியிட்ட தரவுகளின் படி, ஜூலை 11ம் நாள் நண்பகல் 12 மணி வரை, சிச்சுவான் வென்சுவான் நிலநடுக்கத்தில் 69 ஆயிரத்து 197 பேர் உயிரிழந்தனர். 18 ஆயிரத்து 341 பேர் காணாமல் போயினர்.
ஜூலை 11ம் நாள் நண்பகல் 12 மணி வரை, சீனாவின் பல்வேறு நிலை அரசாங்கங்கள் ஒதுக்கீடு செய்த மீட்புதவித் தொகை, 5900 கோடி யுவானைத் தாண்டியது. சீனா பெற்றுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடைத்தொகை மற்றும் பொருட்களின் மதிப்பு, 5700 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு, 2070 கோடி யுவான் மதிப்புள்ள நிதியும் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. அரசவை நிலநடுக்க பேரிடர் நீக்க தலைமையகத்திடமிருந்து அதிகாரம் பெற்ற, சீன அரசவையின் செய்தி துறை பணியகம், இன்று இத்தகவலை வெளியிட்டது.
|