சர்வதேச விதிகளின் படி, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பாதுகாப்பு பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெய்ஜிங் ஒலிம்பிக் பாதுகாப்பு ஆணையத்தைச் சேர்ந்த படைப் பிரிவுப் பணியகத்தின் தலைவர் tian yi xiang நேற்று இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, 4 ராணுவப் பிரதேசங்கள் மற்றும் பல்வேறு படைப் பிரிவுகளைச் சேர்ந்த போர் விமானங்கள், தரையிலிருந்து வான் நோக்கிச் செல்லும் ஏவுகணைகள், வேதியியல் தாக்குதல் தடுப்புச் சாதனங்கள் முதலியவற்றின் மூலம், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இதர ஏற்படக் கூடிய இயற்கைச் சீற்றங்கள், விபத்துகள், பொது சுகாதார மற்றும் பாதுகாப்பு சம்பவங்கள் முதலியவற்றைச் சமாளிக்கும் வகையில், படைப் பிரிவுகள், உள்ளூர் அரசுடன் அவசர மீட்புதவிப் பணியை மேற்கொள்ளும் என்று தெரிய வருகின்றது. படைப் பிரிவுகள் ஒலிம்பிக் பொது ஒப்பந்தம், சர்வதேச விதிகள் மற்றும் சீனாவின் சட்டவிதிகளின் படி செயல்படும் என்று tian yi xiang கூறினார்.
|