ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வரவேற்கும் பெய்ஜிங்
cri
29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நெருங்கி வருவதுடன், பெய்ஜிங் மாநகரில் ஒலிம்பிக் சூழ்நிலை நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றது. தியேன் ஆன் மன் சதுக்கத்தில் ஒலிம்பிக் சின்னம் உள்ளிட்ட பல படங்களை உருவாக்க சுமார் 10 இலட்சம் பூந்தொட்டிகள் வைக்கப்படும். இக்காட்சி குறைந்தது 3 திங்கள் காலமாக தொடரும். திட்டத்தின் படி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, தியேன் ஆன் மன் சதுக்கமும், பெய்ஜிங் மாநகரின் முக்கிய சாலைகளும் சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் அழகான மலர்களை கொண்ட பூந்தொட்டிகளால் அலங்கரிக்கப்படும். பல தொண்டர் சேவை சாவடிகள் பெய்ஜிங்கில் சாலைகளில் தோன்றியுள்ளன. சுமார் 4 இலட்சம் தன்னார்வ தொண்டர்கள் அவற்றில் மக்களுக்குச் சேவை பரிகின்றனர். மேலும், பலர் காரின் முன் சிறிய தேசிய கொடியை புறக்கவிடுகின்றனர். இந்த வடிவம் மூலம், அவர்கள் தனது நாட்டுபுற்றுணர்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
|
|