• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-12 17:56:50    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான எதிர்பார்ப்பு

cri

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நெருங்கி வரும் வேளையில், சீனா முழு உலகின் கவனத்தை ஊர்த்துள்ளது. அண்மையில், பல வெளிநாடுகளின் அரசியல் தலைவர்களும் சர்வதேச பிரமுகர்களும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான ஆயதப் பணியை பாராட்டினர். உலகில் மிக பெரிய வளரும் நாடான சீனாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மீது எதிர்பார்ப்பு கொணடிருப்பதோடு, இது வெற்றிக்கரமாக நடைபெறுவது உறுதி என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

கம்போடிய துணைத் தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான Demetris Christofias பேசுகையில், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான ஆயதப் பணி மிகவும் சிறப்பாக உள்ளது, இது மக்களின் மனதில் ஆழப்பதிந்துள்ளது என்று கூறினார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பற்றி, சீனாவைத் தவிர, கிழக்காசியாவிலான இதர நாடுகளும் பெருமிடம் பெறும் என்றும் அவர் கூறினார்.

ஐ.நா தலைமை செய்லாளர் பான் கி மூன் பேசுகையில், ஜப்பானின் டோக்கியோ, தென் கெரியாவின் சியோல் ஆகியவற்றுக்கு பின், ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நடத்தும் மூன்றாவது ஆசிய நகர், பெய்சிங் ஆகும் என்று கூறினார். உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களின் விளையாட்டு ஆற்றலை வெளிப்படுத்தும் நியாயமான இடமாக பெய்சிங் மாறும். நிலவியல் எல்லையின் கட்டுப்பாட்டைத் தாண்டி, அனைத்து கருத்துகளையும் இனங்களையும் ஒன்றிணைத்து, பல்வேறு நாடுகளின் மக்களுக்கிடையிலான நட்பையும் இணக்கத்தையும் முன்னேற்றி, பரஸ்பர நம்பிக்கையை ஆழமாக்கும் பாலமாகவும், பெய்சிங் மாற வேண்டும் என்று பான் கி மூன் கருத்து தெரிவித்தார்.