7 ஆண்டுகால பயனுள்ள மற்றும் புதுமையான பணிகள் மூலம், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிக்கான பல்வேறு ஆயத்தப் பணிகள் அடிப்படையில் நிறைவடைந்துள்ளன என்று இன்று வெளியான சீன மக்கள் நாளேடு கூறியது.
2001ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்த, விண்ணப்பித்த பின், சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையில், பெய்ஜிங் முதலீடு செய்த நிதியின் மொத்த மதிப்பு, 14 ஆயிரம் கோடி யுவான் ஆகும். 2007ம் ஆண்டு, நகரப்பிரதேசத்தின் காற்றுத் தரம், குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது.
பறவைக் கூடு, நீர் கன சதுரம் உள்ளிட்ட 12 ஒலிம்பிக் விளையாட்டரங்கங்களில், 11 விளையாட்டரங்கங்கள், திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. 8 தற்காலிக விளையாட்டரங்கங்கள் கட்டியமைக்கப்பட்டுள்ளன. சுரங்க இருப்புப்பாதை உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துக் கட்டுமானத்தில் குறிப்பிடத்தக்க சாதனைகள் பெறப்பட்டுள்ளன.
தவிர, ஹாங்காங், ச்சிங் தாவ் ஷாங்காய், தியான்ச் சின், ஷென் யாங், ச்சின் ஹுவாங் தாவ் ஆகிய ஒலிம்பிக் போட்டியை பெய்ஜிங்குடன் இணைந்து நடத்தும் நகரங்களும், திட்டத்தின்படி, உயர் நிலை ஆயத்தப் பணிகளை நிறைவேற்றியுள்ளன.
|