• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-14 09:04:09    
சின்ச்சியாங் தன்னாட்சி பிரதேசத்திலான சர்வதேச தேசிய இன நடன விழா

cri

 

முதலாவது சீனாவின் சின்ச்சியாங் தன்னாட்சி பிரதேசத்திலான சர்வதேச தேசிய இன நடன விழா, ஜூன் திங்கள் 8ம் நாள் இப்பிரதேசத்தின் தலைநகர் உருமுச்சியில் துவங்கியது. இந்தநடன விழாவின் போது, உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல இசை நடனக் குழுக்களின் சுமார் ஆயிரத்து 300 நடன கலைஞர்கள், பல்வேறு தேசிய இனத் தனிச்சிறப்பு வாய்ந்த 45 கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.

பாடல் மற்றும் நடன ஊரான சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசம், பல்வகை பாரம்பரிய நடனப் பண்பாடுகளை கொண்டுள்ளது. இப்பிரதேசத்தில் வாழையடி வாழையாக கையேற்றப்படும் 13 தேசிய இன நடன வடிவங்கள் மிகவும் அருமையானவை. இந்த முக்கிய பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வத்திற்கு சீன அரசு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. பல்வகை நடன விழாக்கள், நடன கருத்தரங்குகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம், இம்மரபுச் செல்வத்தை பயன் தரும் முறையில் சீன அரசு பாதுகாக்க வேண்டும் என்று சீன நடன சங்கத்தின் துணைத் தலைவர் fengshuangbai விருப்பம் தெரிவித்தார்.

தேசிய இன நடனங்கள், குறிப்பாக சிறுபான்மை தேசிய இனத்தின் பழஞ்சமுதாய பாணியுடைய நாட்டுப்புற நடனங்கள் மீது, முன்கண்டிராத அளவில் கவனம் செலுத்தப்பட்டது. நாங்கள் அவற்றைப் பேணிக்காக்க வேண்டும். தவிர, கலையியல் புத்தாக்கத்தில் பல கலைஞர்கள் அதிகமான கவனம் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது என்று அவர் தெரிவித்தார்.


இவ்விழாவின் போது, உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் பல நடனக் குழுகள் உருமுச்சி, ச்சாங்ச்சி ஆகிய நகரங்களின் அரங்குகளில் பொது மக்களை ஈர்க்கும் கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றின. சின்ச்சியாங் தன்னாட்சி பிரதேசத்தின் 21 நடனக் குழுகள் இதில் கலந்துகொண்டன. இந்தநடனக் குழுக்கள், சினச்சியாங் தன்னாட்சி பிரதேசத்தின் பல்வேறு தன்னாட்சி சோகளைச் சேர்ந்தவை.

நண்பர்களே, Xinjiang தன்னாட்சி பிரதேசத்திலுள்ள சர்வதேச நடன விழா என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.