• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-14 10:31:44    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு சீனாவிலுள்ள ரஷிய தூதர்களின் நல்வாழ்த்துக்கள் 3

cri
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு சீனா ஆக்கப்பூர்வமாக முன்னேற்பாடு மேற்கொள்வதை நான் நன்கறிகின்றேன் என்றார் அவர்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீனாவுக்கும் ரஷியாவுக்குமிடையில் தோன்றக் கூடும் நிலைமையை ராசோவ் சிறப்பாக ஆய்வு செய்துள்ளார். இரு நாடுகளும் ஒத்த விளையாட்டு ஆற்றலைக்

கொள்கின்றன. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இரு நாட்டு வீரர்கள் சிறப்பான சாதனைகளைப் பெற முடியுமா என்பது அவர்களின் மனநிலை மற்றும் அவ்விடத்தின் நிலைமை சார்ந்திருக்கும் என்று அவர் கருதுகின்றார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தங்கப் பதக்க வரிசையில் முன்னிலை வகிக்க சீனா, ரஷியா மற்றும் அமெரிக்கா போட்டியிடும். உபசரிப்பு நாடான சீனாவின் வீரர்கள் மேம்பாட்டைப் வகிப்பதோடு, மேலும் பெரும் நிர்ப்பந்தத்தை எதிர்நோக்குவர் என்று ராசோவ் மதிப்பீடு செய்கின்றார். ஆற்றல் முக்கியத்துவம் வாய்ந்தது. ரஷியா, சீனா ஆகியவை பதக்க வரிசையிலான முதல் மூன்று இடங்களை பெறக் கூடும் என்றார் அவர்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நேரடியாக பார்க்க ராசோவ் விரும்புகின்றார். தவிர, 2014ம் ஆண்டு, ரஷியாவின் தென் பகுதியிலுள்ள சோச்சி நகரில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு அனுபவத்தை சேகரிக்கும் வகையில், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான ஆயத்த மற்றும் செயல்பாட்டு பணிகளை அவர் பார்வையிட வேண்டும். தற்போது, குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான ஆயத்த பணிகளை சோச்சி ஆக்கப்பூர்வமாக மேற்கொள்கின்றது. 2014ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நடத்தும் உரிமையை சோச்சி பெற்ற பின், ஒலிம்பிக் திடல்கள் மற்றும் அரங்குகளின் ஆக்கப்பணிகளுக்கான முன்னேற்பாட்டுப் பணிக்கு ரஷிய அரசுத் தலைவர் மற்றும் அரசு மேற்கொண்டுள்ளனர். 2014ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் திடல்களும் அரங்குகளும் வீரர்களுக்கு சிறப்பான சுற்றுச்சூழலை வழங்குவதோடு, ரஷியாவின் தென் பகுதியின் வளர்ச்சியை முன்னேற்ற முடியும் என்றார் அவர்.

மாபெரும் விளையாட்டு போட்டி நடைபெறுவதில் சீனாவுடன் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் மேற்கொள்ள Razov விரும்பினார். விளையாட்டு போட்டி இரு நாட்டு மக்கள் உள்ளிட்ட உலக மக்களுக்கிடையிலான இடைவெளியை குறைக்க முடியும், விளையாட்டு போட்டி மற்றும் ஒலிம்பிக் எழுச்சியின் திறவுகோலாகும் இது தான். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றிகரமாக நடைபெறுவது உறுதி என்று நான் நம்புகின்றேன். சீன வானொலி நிலையத்தின் அனைத்து நேயர்களும் சுமூகமாக வாழ வேண்டும் என்று நான் இதயபூர்வமாக வாழ்த்துகின்றேன். சீன-ரஷிய உத்திநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளி உறவு சீராக வளர வேண்டுமென நான் விரும்புகின்றேன் என்றார் அவர்.
இத்துடன் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுச் செய்திகள் நிறைவு பெறுகின்றன.