• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-14 16:46:27    
ஒலிம்பிக் தீபம் ஏந்துபவர் 1

cri
முதலில், ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தின் திபெத் லாசாவில் கடைசியாக தீபம் ஏந்திய திபெத் இனப் பாடகி Testen Dolma பற்றி கூறுகிறோம்.

நீங்கள் கேட்ட மலைப் பாடல் ஒன்றை கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பாடுவது என்ற இப்பாடல், சீனாவில் அனைவருக்கும் தெரிந்ததாகும். இப்பாடலை Testen Dolma, 45 ஆண்டுகளுக்கு முன் பாடினார். இந்தப் பாடல் சீனா முழுவதிலும் பரவலாக வரவேற்கப்பட்டு, மக்களின் மனதில் ஆழப்பதிந்துள்ளது.

1937ம் ஆண்டு திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் shifatse நகரிலுள்ள ஒரு ஏழை பண்ணை அடிமை குடும்பத்தில் அவர் பிறந்தார். திபெத் மொழியில் Cedai என்பதற்கு நீண்ட ஆயுள் என்று பொருள். Drolma என்றால் பெண் என்பது பொருள். திபெத் பிரதேசம் அமைதியான முறையில் விடுதலை பெறும் முன், குழந்தையான Cedai Drolma தனது குடும்பத்தினருடன் இணைந்து துன்பமான வாழ்க்கை நடத்தினார். பண்ணை அடிமை சொந்தக்காரருக்காக வேலை செய்து வாழ்க்கை நடத்த வேண்டியிருந்தது. 1951ஆம் ஆண்டு திபெத் விடுதலை பெற்ற பின், Cedai Drolmaவின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது.

21வது வயதின் போது, அவர் மறுபடியும் வாய்ப்பு ஒன்றைப் பெற்றார். அதாவது, திபெத்திற்கு இசை துறை திறமைசாலிகளை வளர்க்க, ஷாங்காய் இசை கல்லூரி, தேசிய இன வகுப்பை துவக்கியது. 1958ஆம் ஆண்டில், இக்கல்லூரியின் ஆசிரியர்கள் திபெத்திய மாணவர்களைச் சேர்த்தனர். தலைசிறந்த தனது பாடல் திறமை மூலம் ஆசிரியர்களின் பாராட்டை வென்றெடுத்த Cedai Drolma, சிறப்பான அனுமதி பெற்று, ஷாங்காய் இசை கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அப்போது முதல், அவரது கலைப் பாதை தொடங்கியது. படிப்பு முடித்த பின், அப்போதைய தலைமையமைச்சர் Zhou Enlai அவர்கள் தன்னிடம் கூறிய கூற்றுகள், Testen Dolmaவின் வாழ்க்கையை மாற்றின.

நீ திபெத்துக்கு திரும்பி பணி புரிவது நல்லது. திபெத் மக்களுக்கு, நீங்கள் வேண்டும். உங்களைப் போன்ற கலைஞர்கள் திபெத்திற்கு திரும்பி, பங்காற்ற வேண்டும். திபெத் மக்களுக்கு சேவை புரிய வேண்டுமென்று தலைமையமைச்சர்Zhou Enlai அவர்கள் என்னிடம் சொன்னார். அவரது கூற்றுக்கள், எப்போதும் என் மனதில் பதிந்துள்ளன என்றார் அவர். திபெத்திற்கு திரும்பிய Testen Dolma, இயன்ற அனைத்தையும் பயன்படுத்தி, தலைமையமைச்சரின் கூற்றுக்களை செயல்படுத்தினார். அவர் திபெத்தின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று, பாடல் மூலம், சொந்த பண்பாடு இல்லாது போனால், அது அந்த தேசிய இனத்தின் செழுமை பாதிக்கப்படும். எங்கள் திபெத் கலைப் பணியாளர்கள், குறிப்பாக, இளைஞர்கள், திபெத்தில் மட்டுமல்ல, உலகெங்கும் சொந்த பண்பாட்டை பிரச்சாரம் செய்து வெளிக்கொணர வேண்டும்.

பெய்ஜிங் ஒலிம்பிக் தீபம் ஏந்துபவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது, அவரின் கலை வாழ்க்கையை உறுதிப்படுத்தியுள்ளது. எங்கள் செய்தியாளரிடம், Testen Dolma பாடல் மூலம் அவரது வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்தார்.

ஒலிம்பிக் தீபம் ஏந்துபவராக மாறுவதை நான் எதிர்பார்க்கவில்லை. பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து, பாடல் பாடுவேன் என்றார் அவர்.