• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-14 18:24:18    
தூய்மையான ஒலிம்பிக் என்ற கருத்து

cri

தூய்மையான ஒலிம்பிக் என்பது, 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றிய மூன்று கருத்துக்களில் ஒன்றாகும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணியை மேற்கொள்ளும் போக்கில், தூய்மையான ஒலிம்பிக் என்ற கருத்தை சீனா செயல்படுத்தியதோடு, இக்கருத்தை ஆயத்தப் பணியின் பல்வேறு துறைகளில் உட்புகுத்த பாடுபட்டது. இதன் மூலம், பல முக்கய சாதனைகள் பெறப்பட்டன.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக ஏற்று நடத்த விண்ணப்பித்ததற்கு பிந்திய 7 ஆண்டுகளுக்குள், ஒரு தொகுதி ஒலிம்பிக் விளையாட்டு திடல்கள், அரங்குகள் வசதிகள் ஆகியவற்றுக்கான கட்டுமானத்தை சீனா தரமிக்கதாக நிறைவேற்றியுள்ளது. தூய்மையான ஒலிம்பிக் என்ற கருத்தை செயல்படுத்துவதற்காக, இக்கட்டடங்களையும் வசதிகளையும் உருவாக்கும் போக்கில், எரியாற்றல் மற்றும் நீரின் சிக்கனபயன்பாட்டுக்கு சீனா முக்கியத்துவம் அளித்ததோடு, பல சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய தொழில் நுட்பங்களையும் கடைபிடித்தது. எடுத்துக்காட்டாக, பெய்சிங் மாநகரம் நீர்பற்றாக்குறையான நகராகும். ஒலிம்பிக் விளையாட்டு அரங்குகளையும் வசதிகளையும் கட்டியமைக்கும் போக்கில், நீர்வளச் சிக்கனத்துக்கும், சூழற்சி பயன்பாட்டுக்கும், முன்னுரிமை அளிக்கப்பட்டது. பெய்சிங் ஒலிம்பிக் மையப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒலிம்பிக் பூங்காவில் அதிகப்படியான நீர் பயன்பாட்டுக்கு தேவைப்படுகின்றது. தூய்மையான ஒலிம்பிக் என்ற கருத்தை செயல்படுத்துவதற்காக, இப்பூங்காவில் நீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் முறை நனவாக்கப்பட்டது. இப்பூங்காவின் வடிவமைப்பாளர் Shi Hujie கூறியதாவது:

ஒலிம்பிக் பூங்காவில் இடம்பெறும் அழகிய நீருற்றுகளில் மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் பன்முகங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இது, சீனாவில் இத்தொழில் நுட்பத்தை முதன் முறையாக பயன்படுத்தும் பெரிய ரக நகர பூங்காவாகும். இது, இப்பூங்காவில் தூய்மையான ஒலிம்பிக் என்ற கருத்தை வெளிப்படுத்தும் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும் என்றார் அவர்.

அழகிய நீரூற்றுகளில் பயன்படுத்தப்படுவதை தவிர, சுற்றுச்சூழல் சுகாதாரம், பசுமைமயமாக்கப் பணி முதலிய துறைகளிலும் மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் பயன்படுத்தப்படக் கூடும். 2001ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை வெற்றிகரமாக ஏற்று நடத்த விண்ணப்பித்த பின், நீரை மறுசுழற்சி செய்யும் 10 தொழில் நிறுவனங்கள் பெய்சிங் மாநகரில் கட்டியமைக்கப்பட்டன. 2007ம் ஆண்டு, பெய்சிங்கில் மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்பாட்டு அளவு, 48கோடி கன மீட்டராகும். ஒலிம்பிக் பூங்கா உள்ளிட்ட பல ஒலிம்பிக் செயற்கை நீரூற்றுகளில் மறுசுழற்சி செய்யப்பட்ட நீரே பயன்படுத்தப்படுகிறது.

தவிர, சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், நிலத்தடி வெப்ப ஆற்றல் முதலிய தூய்மையான எரியாற்றல்களை பயன்படுத்தியதால், பெய்சிங் ஒலிம்பிக் திடல்களிலும் அரங்குகளிலும் தூய்மையான எரியாற்றல் பயன்பாட்டு விகிதம் 26 விழுக்காட்டை தாண்டியுள்ளது. பெய்சிங் ஒலிம்பிக் திடல்களும் அரங்களும், உலகில் சூரிய ஆற்றல் மின்சார உற்பத்தி அளவு மிகப் பெரியதாக கொண்ட கட்டிடங்களில் ஒரு பகுதியாகும். ஆண்டுக்கு மின்சார உற்பத்தி அளவு 5 இலட்சத்து 80ஆயிரம் கிலோவாட்டாகும். இதன் விளைவாக, கரியமில வாயுவுன் வெளியேற்றம் 570டன் குறைந்தது.

மேலும், பெய்சிங் மாநகர அரசு காற்று கட்டுப்பாட்டு ஆற்றலை வலுப்படுத்தி வருகினறது. தலைநகர் இரும்புருக்குத் தொழில் நிறுவனத்தைச் சேர்ந்த உலோக உருக்காலை, பெரிய அளவில் மாசுப் பொருட்களை வெளியேற்றும் தொழில் நிறுவனமாகும். தூய்மையான ஒலிம்பிக் என்ற கருத்தை செயல்படுத்துவதற்காக, இத்தொழில் நிறுவனம் இடம் பெயர்க்கப்பட்டது. அத்துடன், பெய்சிங்கிலுள்ள இதர உலோக உருக்காலைகளும் கண்டிப்பான முறையில் கட்டுப்படுத்தப்பட்டன. தலைநகர் இரும்புருக்குத் தொழில் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் Mu huaiming கூறியதாவது:

2008ம் ஆண்டு, உற்பத்தி அளவை குறைத்து, கண்டிப்பான சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டின் மூலம், தலைநகர் இரும்புருக்குத் தொழில் நிறுவனத்தில் பல்வகை மாசுப் பொருட்களின் வெளியேற்ற அளவு, 2007ம் ஆண்டில் இருந்ததை விட 50விழுக்காட்டுக்கு மேல் குறையும் என்றார் அவர்.

தவிரவும், காரின் புகை மாசு வெளியேற்ற வரையறையை பெய்சிங் கண்டிப்பான முறையில் செயல்படுத்துகின்றது. ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் போது, போக்குவரத்து கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம், காரின் புகை மாசின் பாதிப்பை இயன்ற அளவில் குறைக்கும்.

மேற்கூறிய நடவடிக்கைகளை தவிர, பெய்சிங் மாநகரின் மக்களும் பசுமைமயமாக்க நடவடிக்கைகளில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து வருகின்றனர். தற்போது, நீல வானம், வெண்ணிற மேகக் கூட்டங்கள், பச்சை நிற மலை என்ற அழகான காட்சி, பெய்சிங்கில் காணக்கிடைக்கிறது.