• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-15 13:57:08    
யுவுன் ச்சூ கோயில்

cri

யுவுன் ச்சூ கோயில், பெய்ஜிங் மாநகரின் ஃபாங் ஷான் மாவட்டத்தின் தென் மேற்கு மலைப் பிரதேசத்திலுள்ள ஒரு வடிநிலத்தில் இருக்கிறது. அது, பெய்ஜிங் மாநகரின் மத்தியிலிருந்து 75 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அதன் பின்புறம், ஜூ மலை உள்ளது. அதனை நோக்கியிருக்கும் ஷி ச்சிங் மலை, மறைப்பாக இருக்கின்றது. அது ச்சூ லூ மலையால் சூழப்பட்டுள்ளது.

புத்தரின் கைவிரல் எலும்புகள் மற்றும் கல் திருமறையால் இது உலகில் புகழ்பெறுகிறது. பெய்ஜிங் சுற்றுப் புறங்களில், கை எழுத்து, நுண்கலை, தேசிய வரலாறு, புத்த மத வரலாறு முதலிய பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த புகழ்பெற்ற வரலாற்று சின்னங்கள். பெய்ஜிங்கில் ஏன் சீனாவில் பழங்கால கோயில்களிலும் புத்த மதத் துறையிலும் முக்கிய தகுநிலை இருக்கிறன.

யுவுன் ச்சூ கோயில், சுய் தாங் வம்சக்காலத்தில் கட்டியமைக்கப்பட்டது. அது, சீனாவின் வடப் பிரதேசத்தில் மிகப் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகும்.

அதன் சில பகுதிகள், ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் காலத்தில், ஜப்பானின் பீரங்கிதாக்குதால் சீர்குலைக்கப்பட்டன.

இக்கோயிலின் வடக்கிழக்குப் பகுதியிலிருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்திலுள்ள, மலையில் திருமறை வைக்கப்படும் குகைகளின் எண்ணிக்கை, 9 ஆகும். அங்கு, சுய் வம்சக்காலம் முதல் மிங் வம்சக்காலம் வரையான திருமறை கற்பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அவை மற்றும் கோயிலிலுள்ள கல் திருமறையை சேர்த்து மொத்த எண்ணிக்கை, 14312 ஆகும். அவற்றில் பல கோடி சீன எழுத்துக்கள் செதுக்கப்பட்டுள்ளன.