• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-15 14:11:18    
புனரமைப்பிலான சர்வதேச சமூகத்தின் பங்கெடுப்புக்கு வரவேற்பு

cri

சீனாவின் சிச்சுவான் வென்ச்சுவான் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்து இரண்டு திங்களாகிவிட்டது. பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் முழுவதும் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக 14ம் நாள் நடைபெற்ற கருத்தரங்கில் இந்த புனரமைப்பு பணியில் சர்வதேச சமூகம் பங்கெடுப்பதற்கு சீனா வரவேற்பு தெரிவிப்பதாக சீன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மே 12ம் நாள் ரிச்டர் அளவுகோலில் 8ஆக பதிவாகி இருந்த வென்சுவான் நிலநடுக்கத்திற்கு 70 ஆயிரம் பேர் பலியானர். 10 ஆயிரம் பேர் காணாமல் போனர். ஒரு லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு பாதிக்கப்பட்டது. 1949ம் ஆண்டுக்கு பிறகு சீனாவில் ஏற்பட்ட மிக கடுமையான சீற்றம் மிகுந்த முதல் நிலநடுக்கம் இதுவாகும். அதற்கான புனரமைப்பு பணி மிக கடினமானது. பெருமளவிலான நிதி தேவைப்படுவதோடு, முன்னேறிய தொழில் நுட்பமும் நிர்வாக அனுபவமும் வெளிநாடுகளிலிருந்து உட்புகுத்தப்பட வேண்டியுள்ளது. இப்பிரச்சினையை தீர்க்கும் வகையில் சீன அரசும் சீனாவிலுள்ள ஐ.நா வாரியமும் இணைந்து ஜுலை 14ம் நாள் பெய்ஜிங்கில் புனரமைப்புக்கான சர்வதேச அனுபவம் தொடர்பான கருத்தரங்கை நடத்தின. புனரமைப்புத் துறையில் புகழ் பெற்ற நிபுணர்கள் அறிஞர்கள் ஆகியோர் அதில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர். பிரிட்டன் சர்வதேச வளர்ச்சி பகுதியின் நிபுணர் லீ ச்சோ ஹேன் கருத்தரங்கில் பேரிடர் நீக்க பணியில் சீன அரசு காட்டிய மனப்பான்மையை உயர்வாக மதிப்பிட்டார். இது பற்றி அவர் கூறியதாவது.

மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் சீன அரசு பேரிடர் நீக்கப் பணியில் மிக விரைவாக முயற்சி மேற்கொண்டு மீட்புதவி மற்றும் புனரமைப்பை துவக்கியுள்ளது. சீன அரசு மேற்கொண்டுள்ள உயர்வான அரசியல் கடப்பாட்டையும் மீட்புதவு மன உறுதியையும் இது எடுத்துக்காட்டியுள்ளது என்று அவர் கூறினார். அக்கருத்தரங்கில் நிலநடுக்க பேரிடர் நீக்கப் பணியில் ஈடுபட்டுள்ள சிச்சுவான், ஷான்சி, கான்சு முதலிய மாநிலங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஷான்சி மாநிலத்தின் வணிக ஆணையத்தின் அதிகாரி குவான் ச்சு லின் அவர்களில் ஒருவராவார். ஷான்சி மாநிலத்தின் புனரமைப்பு திட்டம் பற்றி அவர் கூறியதாவது.

ஷான்சி மாநிலம் அண்மையில் நிலநடுக்கத்திற்கு பிந்திய புனரமைப்புத் திட்டம் ஒன்றை வகுத்து கொண்டிருக்கின்றது. நடப்பு கருத்தரங்கில் புனரமைப்பு துறையில் செழிமையான அனுபவம் கொண்ட நிபுணர்கள் அறிஞர்கள் ஆகியோர் கொண்டு வந்த வெற்றிகரமான செயல்முறைகள் எங்கள் திட்டத்தை நடைமுறையாக்க வழிக்காட்டுதல் வழங்கும் என்று நம்புகிறேன் என்றார் அவர். நிலநடுக்கம் ஏற்பட்ட பின் சீன அரசு மேற்கொண்ட முயற்சியை சீன வணிக அமைச்சரின் உதவியாளர் ச்சௌ ஹுன் அம்மையார் மீளாய்வு செய்தார். நில நடுக்கம் ஏற்பட்ட 25வது நாளில் சீன அரசவை 《வென்ச்சுவான் நிலநடுக்கத்திற்கு பிந்திய புனரமைப்பு தொடர்பான விதிகள்》,《வென்ச்சுவான் நிலநடுக்கத்திற்கு பிந்திய புனரமைப்பு தொடர்பான அரசு பணித் திட்டம்》,《வென்ச்சுவான் நிலநடுக்கத்திற்கு பிந்திய புனரமைப்புக்கு வழிகாட்டுவது தொடர்பான கருத்து》போன்ற ஆவணங்களை வெளியிட்டது. இவற்றில் புனரமைப்பு தொடர்பான வழிக்காட்டல் சிந்தனை, அடிப்படை கோட்பாடுகள் முக்கிய கடமைகள் மற்றும் அவற்றுக்கான கோரிக்கைகள் தெள்ளதெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். சீன அரசும் மக்களும் முழு மூச்சுடன் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் புனரமைப்புப் பணியில் ஈடுபடும் அதேவேளையில் சர்வதேச சமூகம் இதில் பங்கெடுப்பதற்கு வரவேற்பு தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார். இது பற்றி அவர் கூறியதாவது.

சீன அரசும் மக்களும் தயங்கமின்றி புனரமைப்புப் பணிக்கு பங்கு ஆற்றியுள்ளனர். தற்சார்புடைமை, கடினமான போராட்டம் ஆகியவற்றில் ஈடுபடும் அதேவேளை சர்வதேச சமூகத்தின் பங்கெடுப்பையும் வரவேற்கின்றார்கள். குறிப்பாக நிலநடுக்கத்துக்கு பிந்திய புனரைமைப்பில் ஆற்றல் கட்டுமானம், வளர்ச்சிக்கான நிதி சேகரிப்பு, பொது நிர்வாக மீட்பு முதலிய துறைகளிலான மேம்பாட்டை வெளிக்கொணர்ந்து புனரமைப்புக்கு மேலும் கூடுதலான ஆதரவையும் உதவியையும் சர்வகேத சமூகம் வழங்கும் என்றார் அவர். கருத்தரங்கு நடைபெறுவதற்கு முன் சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் அமெரிக்க பங்கேற்பாளர்களை சந்தித்தார். சீன அரசு பேரிடர் நீக்க பணியில் மனித முதன்மை மற்றும் வெளிநாட்டு திறப்பு என்ற எண்ணத்தில் ஊன்றி நின்று பாதிக்கப்பட்ட மக்களின் தாயக புனரமைப்பில் நாட்டின் அனைத்து மக்களையும் அணிதிரட்டும். அதேவேளையில் சர்வதேச சமூகத்தின் பல்வேறு தரப்புகளின் ஆதரவையும் வரவேற்கும் என்று வென்சியாபாவ் கருத்து தெரிவித்தார்.