இன்று நண்பகல் 12 மணி வரை, சீனா ஏற்றுள்ள உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு நிதி மற்றும் பொருள் உதவியின் மதிப்பு 5740 கோடி யுவானை தாண்டியுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதித் தொகை, 2090 கோடி யுவானாகும் என்று தெரிய வருகிறது.
இன்று நண்பகல் 12 மணி வரையான நிலவரப்பரடி, இந்நிலநடுக்கத்தில் 69ஆயிரத்து 197 பேர் உயிரிழந்தனர். 3 இலட்சத்து 74 ஆயிரத்து 176 பேர் காயமுற்றனர். 18 ஆயிரத்து 263 பேர் காணாமல் போயினர் என்று சீனப் பொது துறை அமைச்சகம் அறிவித்தது.
இன்று நண்பகல் 12 மணி வரை, சீனாவின் பல்வேறு நிலை அரசாங்கங்கள் நிலநடுக்கப் பேரிடர் நீக்கப்பணிக்காக ஒதுக்கீடு செய்துள்ள நிதித் தொகை, 5900 கோடியை தாண்டியுள்ளது என்று சீன நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை காட்டுகிறது.
|