ஜூலை திங்களின் பாதி முதல், அக்டோபர் திங்களின் இறுதி வரை, வென் ச்சுவானில் ரிச்டர் அளவையில் 8ஆகப் பதிவான நிலநடுக்கம் பற்றி, முழுமையான அறிவியல்பூர்வமான ஆராய்ச்சி நடத்தப்படும் என்று சீன நிலநடுக்கப் பணியகம் நேற்று தீர்மானித்தது.
இந்த முழுமையான அறிவியல்பூர்வமான ஆராய்ச்சி, வென் ச்சுவான் நிலநடுக்கத்துக்கான ஆராய்ச்சியின் இரண்டாவது கட்டப்பணியாகும். வென் ச்சுவான் நிலநடுக்கம் உருவாக காரணங்கள் மற்றும் அதன் இயங்கு தன்மையை மேலும் தெளிவாக ஆய்வு செய்து, இந்நிலநடுக்கத்தின் கடும் நில அதிர்வுகளையும் சுற்றுப்புறப்பிரதேசத்தில் நில அதிர்வுகள் நிகழும் சாத்தியக்கூற்றையும் அறிவியல்பூர்வமாக நிர்ணயிக்க, பாடுபடும். அத்தோடு ஆராய்ச்சி மூலம் இடங்களைத் தேடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தைப் புனரமைப்பதற்கும் நிலநடுக்க பேரிடர் நீக்கம் மற்றும் தடுப்புக்கும் தீர்க்கமான தொழில் நுட்பங்களையும் வரையறைகளையும் வழங்குவது, இவ்வாராய்ச்சியின் நோக்கமாகும்.
|