• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-16 10:16:16    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு சீனாவிலுள்ள ஸ்பெயின் தூதரின் நல்வாழ்த்துக்கள் 1

cri
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்த பணிகள் இறுதி கட்டத்தில் நுழைந்துள்ளன. செய்தி ஊடகங்கள் மூலம், சீனாவிலுள்ள ஸ்பெயின் தூதர் Carlos Blasco Villa ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பல்வேறு செய்திகளில் கவனம் செலுத்தி வருகின்றார். சீனாவில் பயணம் மேற்கொண்ட மாட்ரிட் மாநகராட்சித் தலைவருடன் இணைந்து, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப்

போட்டிக்கான தயாரிப்புப் பணிகளை அவர் கண்டு பார்வையிட்டார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பெய்சிங் மாநகர் மற்றும் சீன அரசுகள் மாபெரும் முயற்சி மேற்கொண்டுள்ளன. பல ஒலிம்பிக் திடல்களையும் அரங்குகளையும் சீனா கட்டியமைத்துள்ளது. ஒலிம்பிக் கட்டிடங்களில் பல திடல்களும் அரங்குகளும் கட்டுமானத் துறையில் முன் மாதிரியாக மாறியுள்ளன. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிமேல் நாங்கள் மிகுந்த எதிர்பார்ப்பு கொண்டிருக்கின்றோம் என்றார் அவர்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஒரு மாபெரும் விழாவாகும். சீனா தன்னைப் பற்றி உலகத்திற்கு எடுத்துக்காட்டும் வாய்ப்பை இது வழங்குவதோடு, சீனாவின் வளர்ச்சியையும் மேலும் தூண்டும்.ஒரு வளரும் நாட்டிலிருந்து வளர்ச்சியடைந்த நாடாகவும் பொருளாதார வல்லரசாகவும் சீனா மாறுகின்றது. என்பதில் ஐயமில்லை, கடந்த பல ஆண்டுகளில் பெற்ற மாபெரும் சாதனைகளை சீனா உலகிடம் எடுத்துக்காட்டுகின்ற வரலாற்று வாய்ப்பு என்பது 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக்

விளையாட்டுப் போட்டியாகும். இதன் வெற்றி, எதிர்காலத்தில் சீனாவின் வளர்ச்சியைப் பெரிதும் தூண்டும் என்றார் அவர்.
ஓர் உலகம், ஒரு கனவு என்பது 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முழக்கமாகும். ஸ்பெயின் மூத்த தூதர் கார்லங் பலஸ்கோவை பொறுத்த வரை, ஒலிம்பிக் எழுச்சி விளையாட்டு போட்டி துறையைத் தாண்டி, மனித குலத்தின் பொது ஆவலை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அவர் கருதுகின்றார்.