• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Sunday    Apr 6th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-16 10:17:07    
இறவா வரம் தரும் மது

cri
முன்பொரு காலத்தில் வூ என்ற இடத்தில் ஜுன் என்ற மலையும் பாவ் என்ற மலையும் இருந்தன. ஜுன் மலையிலிருந்து பாவ் மலைக்கு ஒரு சுரங்க, நிலத்தடி வழி இருந்தது. இந்த சுரங்கவழி இரு மலைகளை இணைத்ததாகவும், பாவ் மலை முகட்டில் பல அளவைகளில் மது இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த மதுவை அருந்துபவர்கள் இறவா வரம் பெறுவார்கள் என்று நம்பப்பட்டது. ஹான் வம்ச பேரரசர் வூ தி இந்த மதுவை அருந்தி இரவா வரம் பெற எண்ணினார். எனவே 7 டஜன் ஆட்களை அனுப்பி அந்த மலைமுகட்டுக்கு அனுப்பி மதுவை கொண்டுவரும்படி பணித்தார். மேலும் 7 நாட்கள் விரதமிருந்து தன்னை தயார்படுத்திக்கொண்டார். அவரது ஆட்களும் மலைமுகட்டின் இறவா வரம் தரும் மதுவை கொண்டு வந்தனர். தன்னையே அதற்காக தகுதிபடுத்திக்கொண்ட பேரரசர் வூ தி, மதுவை குடிக்க எத்தனித்தபோது, அவரது அவையில் இருந்த விகடகவியான துங்ஃபாங் ஷுவோ " அரசெ கொஞ்சம் பொறுங்கள். இந்த மது உண்மையானதுதானா, போலியா என்பதை என்னால் சொல்ல முடியும். இருங்கள் நான் பார்க்கிறேன்" என்று கூறியவனாய், ஒரு கோப்பை இறவா வரம் தரும் மதுவை குடித்து முடித்தான். இதைக் கண்ட பேரரசர் தனது அவையின் விகடகவி தன்னை இப்படி ஏமாற்றிய கோபமும், இறவா வரம் தரும் மதுவில் ஒரு கோப்பையை இப்படி அவன் எளிதாக பறித்துகொண்ட ஆத்திரமும் கொண்டவனாக, துங்ஃபாங்கை கொல்ல ஆணையிட்டான்.
இதைக் கேட்ட துங்ஃபாங் ஷுவோ, அரசே நீங்கள் என்னை கொல்ல ஆணையிடுவது முறையல்ல, அது தவறு. என்னை நீங்கள் கொன்றுவிட்டால், இந்த இறவா வரம் தரும் மதுவால் பயனேதுமில்லைதானே. இந்த மது இறவா வரம் தரும் அமிழ்து என்றால், நீங்கள் எப்படி என்னை கொல்ல முடியும்" என்று கேட்டான்.
பேரரசர் விகடகவியின் மதுநுட்பத்தையும், அவனது கூற்றிலிருந்த உண்மையையும் உணர்ந்து அவனை மன்னித்து விடுவித்தார்.
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040