• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-16 17:33:15    
பெய்சிங் தலைநகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை

cri

ஜுலை 20ம் நாள் முதல், பெய்சிங் தலைநகர் விமான நிலையம் உள்ளிட்ட சீனாவின் சில விமான நிலையங்களில் சிறப்பு பாதுகாப்புச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அப்போது, சீனாவின் காவற்துறை வாரியங்கள், பெய்சிங் தலைநகர் விமான நிலையத்தைச் சேர்ந்த முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது முனையங்களின் பல்வேறு நுழை வாயில்களில் சோதனை வசதிகளை உருவாக்கும். அனைத்து பயணிகளும் அவர்களை வரவேற்கும் அல்லது வழியனுப்பும் நபர்களும் விமான நிலையத்திலான பணியாளர்களும், பாதுகாப்புச் சோதனையை ஏற்றுகொண்ட பிறகே முனையத்தில் நுழைய முடியும் என்று தெரிய வருகின்றது.

தவிர, பாதுகாப்புச் சோதனைக்கு பின், பயணிகள் வரிசையாக நிற்பதற்கான சேவை குறித்து, விமான நிலையங்கள் பல உகந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும். முதியோர், குழந்தைகள், ஊனமுற்றோர் முதலியோரின் பயணப் பொதிகளை கொண்டு செல்வதற்கு பெய்சிங் தலைநகர் விமான நிலையத்தின் சிறப்புப்பணியாளர்களும் தொண்டர்களும் உதவியளிப்பர்.