• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-16 19:02:13    
பெய்சிங் ஒலிம்பிக் தன்னார்வத் தொண்டர்கள் பணி

cri

ஜுலை திங்கள் துவக்கம் முதல், பெய்சிங் ஒலிம்பிக் தன்னார்வத் தொண்டர்கள் படிப்படியாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்புடைய ஆயத்தப் பணிகள் பன்முகங்களிலும் செய்து முடிக்கப்பட்டுள்ளன என்று பெய்சிங் ஒலிம்பிக் போட்டி அமைப்புக் குழுவின் தன்னார்வத் தொண்டர்கள் பிரிவின் துணைத் தலைவர் சாங் ஹோங் அம்மையார் இன்று பெய்சிங்கில் கூறினார்.

பெய்சிங் ஒலிம்பிக் மற்றும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டிகளின் போது, ஒரு லட்சம் தன்னார்வத் தொண்டர்கள் பல்வேறு போட்டிகளுக்கு சேவை வழங்குவர். அதே வேளையில், 4 இலட்சம் தன்னார்வத் தொண்டர்கள் நகரிலும் விளையாட்டு அரங்குகளுக்கு அருகிலும் தகவல், மொழிபெயர்ப்பு, முதலுதவி போன்ற சேவைகளை வழங்குவர். இந்த ஒரு லட்சம் மற்றும் 4 லட்சம் என்ற தொண்டர்களின் பெய்சிங்கிற்கு வரும் விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்களின் மொத்த எண்ணிக்கையை தாண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் போட்டிக்கு சேவை வழங்குவதற்கு பல்வேறு துறைகள் வெளிப்படுத்தும் பெரும் அன்பே இதற்கு முக்கிய காரணமாகும். அதே வேளையில், பொது மக்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுப்பது என்ற தன்னார்வத் தொண்டர்கள் பணியின் கோட்பாட்டை இந்த எண்ணிக்கை முக்கியமாக வெளிப்படுத்தியுள்ளது. இன்று பெய்சிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் தன்னார்வத் தொண்டர்கள் பணி பற்றிய சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் சாங் ஹோங் அம்மையார் இதைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது

 

பொது மக்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுக்கும் கோட்பாட்டை வெளிப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். ஆறு மற்றும் ஒன்று என்ற பணி அமைப்பு மூலம், மேலதிக தன்னார்வத் தொண்டர்கள் ஒலிம்பிக்கில் பங்கெடுக்கலாம். இத்தகைய முயற்சி மூலம், ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் ஆயத்தப் பணியில், தன்னார்வத் தொண்டர்களின் பணி சமூகத்தின் பல்வேறு துறைகளில் ஆழமாக்கப்படும் என்று விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.

அவர் கூறிய ஆறு மற்றும் ஒன்று எனும் பணி அமைப்பில், போட்டிகளுக்கான தன்னார்வத் தொண்டர்கள், நகர தன்னார்வத் தொண்டர்கள், சமூக தன்னார்வத் தொண்டர்கள் முதலிய 6 திட்டப்பணிகளும் பெய்சிங் புன்னகை என்ற தலைப்பிலான நடவடிக்கையும் இடம்பெறுகின்றன என்று சாங் ஹோங் விளக்கினார். பல்வகை தன்னார்வத் தொண்டு சேவைப் பணிகளால், மேலும் அதிகமான மக்களுக்கு ஒலிம்பிக் போட்டியில் நேரடியாக பங்கெடுக்கும் வாய்ப்பு உள்ளது. பெய்சிங் ஒலிம்பிக் போட்டியின் போது, ஏறக்குறைய 100 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து 935 வெளிநாட்டு தன்னார்வத் தொண்டர்கள் சேவை புரியவுள்ளனர். பெய்சிங் ஒலிம்பிக் போட்டியின் தன்னார்வத் தொண்டராக, அமெரிக்காவின் போஸ்டன் எமெர்சன் கல்லூரரியை சேர்ந்த புரூஸ் லெர்ச்ச ஒரு வாரத்துக்கு முன் சீனாவுக்கு வந்தார். அவர் கூறியதாவது

அமெரிக்காவில், தன்னார்வத் தொண்டர்கள் பணிக்கு ஆயத்தம் செய்தோம். அவற்றில் சீனப் பண்பாடு மற்றும் சீன மொழியை கற்றுக்கொள்வது முக்கியமாக இடம்பெறுகிறது. அமெரிக்கராக, பெய்சிங்கிலுள்ள வாழ்க்கை மற்றும் சீனாவை அறிந்துக் நேரில் கொண்டு, காண்பது பற்றி நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று புரூஸ் கூறினார்.

தன்னார்வத் தொண்டர்களுக்கு, தொடர்புடைய சிறப்பு அறிவு மற்றும் அனுபவங்களைக் கொள்வது இன்றியமையாதது. அவர்கள் உயர் நிலைச் சேவை வழங்குவதை உத்தரவாதம் செய்யும் வகையில், பெய்சி ஒலிம்பிக் அமைப்புக் குழு அவர்களுக்கு பல அறிவியல் ரீதியாக மற்றும் முறைப்படி பயிற்சி அளித்துள்ளது. ஒலிம்பிக் போட்டியின் போது, ட்யிங் குவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லியாங் சூ தேசிய நீச்சல் மையத்தில் தன்னார்வத் தொண்டர் சேவை புரிவார். 2006ம் ஆண்டு முதல், பல போட்டிகளின் தன்னார்வத் தொண்டர் சேவைப் பணியில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். முன்னதாக, நீர் கன சதுரம் என்று அழைக்கப்படும் தேசிய நீச்சல் மைகத்தில் நடந்த ஒலிம்பிக் சோதனை போட்டியில் லியான் சூ பங்கெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் போட்டியின் தேர்ச்சி மற்றும் முதிர்ச்சி மூலம், பெய்சிங் தன்னார்வத் தொண்டு லட்சியம் புதிய நிலைக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பெய்சிங் ஒலிம்பிக் போட்டி அமைப்புக் குழுவின் தன்னார்வத் தொண்டர்கள் பிரிவின் தலைவர் லியு சியான் தெரிவித்தார். அவர் கூறியதாவது

உரை5

ஐ.நா. தன்னார்வத் தொண்டர்கள் அமைப்பின் அனுபவங்களின் படி, ஒரு பிரதேசத்தில் அதன் தன்னார்வத் தொண்டர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 30விழுக்காடு வகித்தால், அது நல்லது. ஒலிம்பிக் போட்டி மூலம், பெய்சிங்கில் 60லட்சம் பேர் அன்றாட தன்னார்வத் தொண்டர்களாக, பணியில் ஈடுபட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம் என்று லியு சியான் கூறினார்.