பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி விரைவில் நடைபெறவுள்ள அண்மையில் பாதுகாப்பு உத்தரவாத நிலையை சீனா உயர்த்தியுள்ளது. ஆனால், பாதுகாப்புச் சோதனை நடவடிக்கைகள் அளவுக்கு மீறி மிகக் கண்டிப்பாக இருக்கிறன என்று மேலை நாடுகளின் சில செய்தி ஊடகங்கள் கருத்து தெரிவித்தன என்று சீன மக்கள் நாளேட்டின் வெளிநாட்டு பிரிவு இன்று தனது பெயரிட்ட கட்டுரையில் கூறியது. மேலதிக நாடுகள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பாதுகாப்பு உத்தரவாதத்துக்கு முழுமையான புரிந்துணர்வு மற்றும் உதவியை வழங்க சீனா விரும்புவதாக இக்கட்டுரை கூறியது.
பாதுகாப்பு, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முக்கியமான பிரச்சினையாகும் என்று செப்டம்பர் 11 நிகழ்ச்சிக்குப் பின், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் Jacque Rogge பலமுறை வலியுறுத்தினார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் நாடு பாதுகாப்பு உத்தரவாத நிலையை உயர்த்துவது வழக்கமாகியுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்திய நாடுகள் வேறுப்பட்ட அளவிலான பாதுகாப்பு எச்சரிக்கைகள் பெற்றமை. இயல்பு சீனாவுக்கு இது விதிவிலக்கு அல்ல என்றும் கட்டுரை கூறியது.
சீனாவின் உள்நாட்டுப் பாதுகாப்புச் சூழல் சிறந்ததாக இருந்தாலும், தீவிரவாதிகள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைச் சீர்குலைக்கும் நடவடிக்கை மீது சீனா விழிப்புடன் இருக்க வேண்டும். அதில் கலந்து கொள்ளும் வீரர்கள், தலைவர்கள், இரசிகர்கள், தொண்டர்கள் அனைவரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கட்டுரை கூறியது.
|