• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-17 10:35:38    
பன்னாட்டு முதலீட்டுக் குழு

cri
16ம் நாள், சீன வணிகத் துறை அமைச்சகம் மற்றும் சி ச்சுவான் மாநிலத்தின் வணிகத் துறை ஆணையம் சி ச்சுவான் நிலநடுக்கத்துக்குப் பின் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இடையிலான முதலீட்டுப் பரிமாற்றக் கூட்டம் ஏற்பாடு செய்தன. சி ச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்துக்குப் பின், மிகப் பெரிய வெளிநாட்டு வணிகர்களின் முதலீட்டுக் குழுவும், உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும், இதில் கலந்து கொண்டனர்.

சென் து நகரில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் சி ச்சுவான் மாநிலத்தின் தொடர்புடைய வாரியங்களும், 8 திட்டப்பணிகள் தொடர்பான உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டுள்ளன. இத்திட்டப்பணிகளின் மொத்தம் மதிப்பு, 218 கோடி அமெரிக்க டாலராகும்.

தூ ச்சியாங் யான், ஷீ ஃபாங் முதலிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான சோதனைப் பணி மூலம், சி ச்சுவான் மாநிலத்தில் முதலீடு செய்யும் அவர்களது நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டது. அடுத்தபடியாக அவர்கள் பல்வேறு நகரங்கள் மற்றும் சோக்களின் உருப்படியான தொழில் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, ஆழமான பேச்சுவார்த்தை நடத்தி, ஒத்துழைப்பதாக பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.