ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியுடன் தொடர்புடைய வெளிநாட்டு செய்தியாளர்கள் சீனாவில் பேட்டி காணும் விதியின்படி, பேட்டியளிக்கும் வாரியங்கள் மற்றும் தனியாரின் அனுமதியை மட்டும் பெற்று, அவர்கள் பேட்டிகள் எடுக்கலாம் என்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் செய்தித் தொடர்பாளர் கொ வுய்மின் இன்று கூறினார்.
பல்வேறு நாடுகளின் செய்தியாளர்களுக்கு முழுமையான செய்திச் சேவையை வழங்கும் ஒலிம்பிக் வாக்குறுதியை சீனா பின்பற்றி, உபசரிப்பு நாட்டின் கடப்பாட்டை நன்றாக நிறைவேற்றும். தவிர, நட்பார்ந்த செய்தியாளர்கள் சீனாவை அறிந்து கொண்டு, செய்திகளை வெளியிடுவதற்கு உதவியும் செய்யும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
|