சீன பெய்ஜிங் மாநகரத்தின் அரண்மனை அருங்காட்சியகம், உலகளவில் புகழ் பெற்ற, அருமையான சுற்றுலா காட்சி தலங்களில் ஒன்றாகும். அரண்மனை அருங்காட்சியகத்திற்கு ஊனமுற்றோரும் தடையின்றி செல்லும் வழி இவ்வாண்டு மே திங்கள் நிறுவப்பட்ட பின், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊனமுற்ற பயணியர்களுக்கு அதிகமான வசதிகளைக் கொண்டு வருகிறது.
2003ம் ஆண்டு முதல், அரண்மனை அருங்காட்சியகம் 30 இலட்சம் யுவானைப் பயன்படுத்தி, இக்காட்சி தலத்தில் ஊனமுற்றோரும் தடையின்றி செல்லும் வழித் திட்டப்பணியைக் கட்டியமைக்கத் துவங்கியது. முன்னிருந்த கட்டிட்ட அமைப்பை சீர்குலைக்காத வகையில், இத்திட்டப்பணி உருவாக்கப்பட்டது என்று அரண்மனை அருங்காட்சியகத்தின் விளம்பர பிரிவின் தலைவர் yanhongbin தெரிவித்தார்.தவிர, ஊனமுற்றோர் வழிகாட்டி கையடக்க நூலை அரண்மனை அருங்காட்சியகம் வெளியிட்டு, அனைவரும் தடையின்றி கண்டுகளிக்கும் வசதிகளின் பரவலை விளக்கியுள்ளது.
|