
shen nong மலை, சீனாவின் he nan மாநிலத்தின் qin yang நகரத்தில் அமைந்துள்ளது. அது, கம்பீரமானது. shen nong மலை வான ளாவியது. இதற்கு ஒரு கதை உண்டு. பண்டைக் கால மன்னர் shen nong இவ்விடத்தில் தானியங்களை வித்தியாசப்படுத்தி, பல்வகை புல்லைச் சாப்பிட்டுப்பார்த்தாராம். அப்பொழுது முதல், வேளாண் பயிர் பயிரிடும் சமுதாயத்தில் சீனா அடி எடுத்துவைத்தது. இம்மன்னரை நினைவு கூரும் பொருட்டு, shen nong மலை என அதுற்குப் பெயர் சூட்டப்பட்டது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 மீட்டர் உயரத்தில் shen nong மலை அமைந்துள்ளது. அதன் உச்சியில் நின்றால், காற்று வீசும் போது உருவாகும் ஒலி, காதில் விழும். இவ்விடத்தில் கம்பீரமான மலை செங்குத்தான கற்பாறை ஆகியவற்றைக் கண்டுகளிக்கலாம்.

|