• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-17 18:02:44    
சீற்றத்தை துணிவுடன் எதிர்நோக்கியுள்ள சீன மக்கள் 1

cri

கலை........சீ.வ. வணக்கம் நேயர்கள். இப்போது உங்கள் சந்தேகங்களுக்கும் வினாக்களுக்கும் விடை தரக் கூடிய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம். இந்த முறை சீனச் சிச்சுவான் நிலநடுக்கம் பற்றி தி. கலையரசியும் தமிழன்பனும் உங்களுக்கு சேவை புரிகின்றார்கள்.

தமிழன்பன்.......வணக்கம் அன்பான நேயர் நண்பர்களே. மே திங்கள் 12ம் நாள் சீன மக்கள் மற்றும் உலக மக்களின் நினைவுகளிலிருந்து அழிக்கப்பட முடியாத நாளாகிவிட்டது.

கலை..........ஆமாம், கடும் சிச்சுவான் வெச்சுவான் நிலநடுக்கம் ஏற்பட்டு கிட்டத்தட்ட 2 திங்களாகிவிட்டது.

தமிழன்பன்.......இப்போதும் சிச்சுவான் மாநில மக்களும் சீனாவின் பல்வேறு மாநிலங்களும் தொடர்ந்து பேரிடர் நீக்க மீட்புதவி பணியில் ஈடுப்பட்டு தங்கள் முயற்சிளால் பேரிடரை குறைக்க இயன்ற பணிகளை செய்து வருகின்றனர்.

கலை..........பாதிக்கப்பட்ட மக்களை குடியமர்த்துவதற்காக தற்காலிக வீடுகள் கட்டியமைக்கப்பட்டு வருகின்றன. விசாலமான வகுப்பறைகளில் உட்கார்ந்த வண்ணம் மாணவர்கள் கற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களின் ஒழுங்கான கல்வி வாழ்க்கை மீட்கப்பட்டுள்ளனது.

தமிழன்பன்.......உயர் நிலை கல்வி நிலையங்களில் சேரும் வகையில் இடைநிலை மாணவர்கள் நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் அவர்களுடைய படிப்பை மீட்டுள்ளனர்.

கலை.........ஆமாம். இப்போது அவர்கள் பல்கலைக்கழகத்தின் நுழைவு தேர்வு எழுதினர்.

தமிழன்பன்.......புனரமைப்புக்காக ஒன்று மற்றொன்றுக்கு நேரடியாக உதவிடும் முறையில் பல்வேறு மாநிலங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை தத்தெடுத்துக் கொண்டு அங்குள்ள புனரமைப்புக்கு முழுமையாக பொறுப்பு ஏற்றுள்ளன.

கலை..........ஆகவே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் முழு நம்பிக்கையுடன் தாயகத்தை மீட்பதற்கு சுறுசுறுப்பாக முயற்சித்து வருகின்றனர்.

தமிழன்பன்........தற்போது நீண்ட வரிசையிலான ஒழுங்கான தற்காலிக வீடுகள் நிறைந்த வசிப்பிடங்களில் மக்கள் இன்பமாக வாழ்கின்றனர்.

கலை.......வேலை வாய்ப்புக்களை பரவல் செய்யும் விளம்பர தொழில் நிறுவனங்கள் மக்களுக்கு திறமை பெறும் பயிற்சி வகுப்புக்களை நடத்தி வேலை வாய்ப்பு பெற அவர்களுக்கு உதவி வழங்கியுள்ளன.

தமிழன்பன்........ஆகவே சிச்சுவான் மாநிலத்தின் வெச்சுவான் மக்கள் கவலையின்றி புனரமைப்பு இலட்சியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கலை......சீனத் தலைவர்கள் உடனடியாக அவ்வபோது அங்கே சென்று புனரமைப்பு பணியை பார்வையிட்டு கண்காணித்து பரவல் செய்து வருகிறார்கள்.

தமிழன்பன்....... பேரிடரை துணிவுடன் தாங்களே அனுபவித்த மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நேரில் சந்தித்துள்ள நமது வானொலியின் ஹிந்தி மொழி பிரிவின் பணியாளர் லீ ஜின், பேரிடர் நீக்கப் பணியின் போது முன்னணி செய்தியறிவிப்பாளராக பணிபுரிந்த ஜப்பான் மொழி செய்தியாளர் சியாங் பிங், கொரிய மொழி செய்தியாளர் கின் மின் கோ ஆகியோர் பற்றி நமது இன்றைய நிகழ்ச்சியில் குறிப்பிட வேண்டும்.

கலை..........நண்பர்களே லீ ஜின் என்பர் சாதாரண இளம் பணியாளராவார். விடுமுறையை உல்லாசமாக கழிக்கும் வகையில் அவர் பிறந்த ஊரான யுநான் மாநிலத்துக்கு திரும்பினார். விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணம் செய்ய அவர் தமது பெற்றோர் சித்தப்பா ஆகியோருடன் இணைந்து மே 12ம் நாள் நண்பகல் காரில் சிச்சுவான் மாநிலத்தின் சுற்றுலா இடமான சியூ ச்சை கோ நோக்கி புறப்பட்டார்.

தமிழன்பன்......அவர்கள் சியூ ச்சை கோ செல்லும் வழியில் மௌ மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த போது காலநிலை சிறப்பாக இருந்தது. அழகான மலைத் தொடர்கள் இதயத்திற்கு இதமாய் காட்சியளித்தன. மகிழ்வாய் லீ ஜின் காரில் இருந்த அந்த நேரம் தான் எண்ணஇப்பார்க்க முடியாத அந்த கடுமையான நிலநடுக்கம் அந்த சுற்றுலா வழியில் நிகழ்ந்தது.

கலை..........இது பற்றி லீ ஜின் கூறியதாவது.

தமிழன்பன்.......நண்பகல் சாப்பிட்ட பின் என் தந்தை கார் ஓட்டினார். நான், என் தாய், சித்தப்பா மூவரும் காரில் பயணம் செய்துகொண்ட சாலையின் இருப்பக்கங்களிலுள்ள காட்சிகளை கண்டுகளித்து மகிழ்ந்து சென்று கொண்டிருந்தோம்.

கலை..........திடீரென மலையுச்சியிலிருந்து புழுதி எழும்பியது. சாலை அதிர்ந்தது. எதிரேயிருந்த மலைகள் அதிர்ந்தன. இவற்றை கண்டுபிடித்த லீ ஜின் திடீரென பயந்தவராய் காரை நிறுத்த சொன்னார்.

தமிழன்பன்.......அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள் வாகனங்கள் அனைத்தும் நின்றனவா?

கலை..........ஆமாம். அப்போது எல்லோருக்கும் என்ன நிகழ்ந்தது என்று தெரிய வில்லை.

தமிழன்பன்.......நிலநடுக்கம் நிகழ்கின்ற போது அதன் அதிர்வு அதிக நேரம் நீடிக்காது என்று தொலைக் காட்சி மூலம் அறிந்திருகின்றேன்.

கலை..........ஆமாம். லீ ஜின் அவர்கள் சந்தேகித்த போது கடுமையான நிலநடுக்க அதிர்வு உணரப்பட்டது. மிக பெரிய கற்கள் மலைகளின் மேலிருந்து உடைந்து அடிவாரத்தில் விழுந்தன.

தமிழன்பன்.......அப்போது லீ ஜின் என்ன செய்தார்?

கலை........அது நிலநடுக்கம் தான் என்று அவருடைய தந்தை எச்சரித்தார். காரிலிருந்து தாயை அழைத்துக் கொண்டு லீ ஜின் சாலையின் பக்கத்திலிருந்த நிலப்பரப்புக்கு ஓடினார்.

தமிழன்பன்....... பின்னர் என்ன நிகழ்ந்தது?

கலை..........அவர்கள் ஓடி தப்பிய பின் திரும்பி பார்த்த போது மிகப் பெரிய எடையுள்ள கற்கள் சுற்றுலா பயணிகளின் காரை நாசமாக்கியிருந்தன. ஆனால் லீ ஜிங்கின் காருக்கு சேதமில்லை.

தமிழன்பன்.......உயிர் தப்பி பிழைத்த லீ ஜின்கும் அவருடைய குடும்பத்தினரும் பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர். அப்போது மலைத் தொடர்கள் இரைச்சலோடு அதிர்ந்தன. எண்ண முடியாத அளவிலான கற்கள் மலைத் தொடர்களின் மேல் பகுதியிருந்து அடிவாரத்தில் விழுந்தன. மலைப் பிரதேசங்கள் முழுவதும் புழுதியில்

மூழ்கின என்று லீ ஜின் வர்ணித்தார்.

கலை..........நல்ல வேளையாக சுற்றுலாப் பயணம் மேற்கொண்டவர்கள் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. சாலை பக்கங்களில் வாழ்கின்ற கிராமவாசிகள் சுற்றுலாப் பயணிகளை வரவேற்று உணவும் நீரும் கொடுத்துதவினர். தொலைவிலுள்ள மக்களுடனான தொடர்பு இழந்திருந்தாலும் யாருக்கும் உயிர் ஆபத்து ஏற்படவில்லை. உடனடியாக லீ ஜின் உள்ளூர் மக்களுடன் இணைந்து பேரிடர் நீக்கப் பணியில் ஈடுபட்டார்.

தமிழன்பன்.......நாங்கள் எல்லா உணவுப் பொருட்களை குவித்து அணிதிரட்டி கணக்கிட்டு ஒரு நாளுக்கு இரண்டு முறை சாப்பிட்டோம். சிக்கனப்படுத்தி மிஞ்சிய உணவுப் பொருட்களை ஆபத்தான நிலைமையில் உள்ளோருக்கு கொடுத்துதவ மக்கள் பாடுபட்டதை லீ ஜின் கூறினார்.