• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-17 18:50:59    
சீன மனித வள ஆற்றல்

cri
சீன மனித வள ஆற்றல்

அறிவியல் தொழில்நுட்பத்துறையில் சீனாவின் மனித வள ஆற்றல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. 2005ல் இருந்த மூன்றரை கோடியிலிருந்து 4 கோடியே 20 லட்சம் என்ற அளவில் சீனாவில் அறிவியல் தொழில்நுட்பத்துறை பணியாளர்கள் அதிகரித்துள்ளனர். சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சங்கத்தின் அறிக்கையின் படி இந்த 4 கோடியே 20 லட்சத்தில் 65.7 விழுக்காட்டினர் 40 வயதுக்கு உட்பட்டோர், ஆண் பெண் விகிதாச்சாரம் 2 : 1 என்ற அளவில் காணப்படுகிறது. சீனாவின் புத்தாக்க வளர்ச்சிக்கு தோள் கொடுக்கும் முக்கிய பங்கு வகிக்கும் இவர்களில் பெரும்பாலானோர் கல்வித்துறையில் உள்ளவர்கள். 7 லட்சம் பேர் வேளாண் துறை சார் பணியில் உள்ளவர்கள். பிரதேச ரீதியாக பார்க்கையில் சீனாவின் முன்னேறிய கிழக்கு பகுதியிலிருந்து 48.8 விழுக்காட்டினரும், மையப்பகுதியிலிருந்து 28.3 விழுக்காட்டினரும், பரந்து விரிந்த மேற்கு பகுதியிலிருந்து 21.6 விழுக்காட்டினரும் சீன அறிவியல் தொழில்நுட்பத்துறை மனித வள ஆற்றலில் பங்கு வகிக்கின்றனர். 4 கோடியே 20 லட்சம் பேர் கொண்ட சீனாவின் அறிவியல் தொழில்நுட்பத்துறை மனித வளம், எண்ணிக்கையளவில் உலகின் முன்னணியில் இருக்கிறது.

செல்லிடபேசி பயன்பாட்டாளர்கள்

சீனாவின் செல்லிடபேசி பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை கடந்த மார்ச் திங்கள் வரையான புள்ளிவிபரங்களின் படி 57 கோடியே 40 லட்சத்துக்கும் மேலாகும். மேலதிக மக்கள் நிலையான தொலைபேசி இணைப்புகளிலிருந்து செல்லிடபேசிக்கு மாறியுள்ளனர் என்று தெரிகிறது. செல்லிடபேசி பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இறுதியில் இருந்ததை விட 2 கோடியே 73 லட்சம் அதிகரித்துள்ளது.

இவ்வாண்டின் முதல் காலாண்டில் மட்டும் 4 கோடியே 40 லட்சம் பேசி நிலையான தொலைபேசி இணைப்புகளை நீக்கியதால் தற்போது நிலையான தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை 36 கோடியே 1 லட்சமாகியுள்ளது. இவ்வாண்டின் முதல் காலாண்டில் மட்டும் சீன செல்லிடபேசி பயன்பாட்டாளர்கள் 174.9 பில்லியன் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளனர்.