• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-17 10:03:33    
ஷிபோஃ என்னும் கலை சங்கமம்

cri
ஷிபோஃ என்னும் கலை சங்கமம் நிறுவப்பட்ட பின் இதுவரை, இக்கிராமத்தில், நான்கு கண்காட்சிகளை நடத்தியுள்ளது. இவ்வாண்டின் துவக்கத்தில், நியூயார்க்கிலுள்ள SOHO 456 என்னும் ஓவியவிறைந்தாயில், கண்காட்சியை நடத்தியது. அதன் மூலம், கலைஞர்களின் படைப்புகள், நியூயார்க் பார்வையாளர்களின் மனதில் குறிப்பிடத்தக்க விதமாக ஆழப்பதிந்துள்ளன. ஓவியர் ஹுவாங் கோ ரை மேலும் கூறியதாவது:
இவ்வாண்டின் ஜனவரி 8ம் நாள் இக்கண்காட்சி நியூயார்க்கில் நடைபெற்றது. நியூயார்க் கலைஞர்கள் பலர், அதனைப் பார்த்து சென்றனர். பொதுவாக, வெளிநாட்டு கலைஞர்கள், விமர்சகர்கள், கண்காட்சியைத் திட்டமிட்டவர்கள், பொருட்ளைத் திரட்டியவர்கள் ஆகியோர், பெய்ஜிங், ஷாங்காய் ஆகிய பெரிய நகரங்களை அறிந்தவர்கள். ஆனால், ஹேனான்னை

அறிந்திருக்கவில்லை. அதனால், ஹேனான் மற்றும் ஷிபோஃ கிராமத்தின் நவீன கலையைப் பிரசாரம் செய்வது, இக்கண்காட்சி நடத்துவதன் நோக்கமாகும் இலக்காகும். அதனைப் பார்வையிட்ட பின், ஹேனான், செங் சாவ், ஷிபோஃ கிராமம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலாவாக வந்து பார்க்க வேண்டுமென அவர்கள் விரும்பினர் என்றார் அவர்.
ஷிபோஃ கிராமத்தில், கலை பணியாளர்கள், உள்ளூரின் விவசாயிகளுடன் இணக்கமாக வாழ்கின்றனர். ஷிபோஃ என்னும் கலை சங்கமம், உள்ளூர் அரசின் ஆதரவைப் பெற்றுள்ளது. ஷிபோஃ கிராமத்தின் பொது அடிப்படை வசதிகளைக் கட்டியமைக்க, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், மேன்மேலும் அதிகமான கலைஞர்கள் இங்கு வருவதுடன், ஷிபோஃ கிராமம் படிப்படியாக மாறி வருகிறது. இது குறித்து, ஓவியர் ஹுவாங் கோ ரை கூறியதாவது:

வீட்டை வாடகைக்கு எடுப்பது என்பது, கிராமவாசிகளுக்குக் கொண்டு வரப்பட்ட நேரடி நலனாகும் என்று கருதுகின்றேன். ஷிபோஃ கிராமத்தின் பண்பாட்டுத் துறைக்கான பங்கு, அதன் முக்கிய தாக்கம் ஆகும். கிராமவாசிகளின் பண்பாட்டு கல்வியறிவை உயர்த்துவது இதில் அடங்கியுள்ளது என்றார் அவர்.
ஷிபோஃ கிராமத்தில், கலைஞர்கள், உள்ளூர் விவசாயிகளுடன் இணைந்து வாழ்ந்து, அவர்களின் உற்சாகமான மற்றும் நேர்மையான மனப்பாங்கை உணர்ந்துகொண்டனர். உள்ளூரின் விவசாயிகள், கலைஞர்களை அப்படியே ஏற்றுக்கொண்டனர்.
கிராமவாசி வாங் அம்மையார் கூறியதாவது:
கலைஞர்கள் வந்த பிறகு, ஓவியம், சூழல் முதலிய துறைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. துவக்கத்தில், குழந்தைகளுக்கு எல்லாம் புரியாது. ஆசிரியர்கள் கற்றுதருவதால், அவர்கள் மெதுவாக புரிந்துகொள்ளலாம் என்றார் அவர்.
ஷிபோஃ என்னும் கலை சங்கமத்தின் மதிப்பு, கலைஞர்களை முன்னேற்றுவதில் மட்டுமல்ல, பொது மக்களுக்கு கலை மற்றும் பண்பாட்டுப் பரவல் செய்வதிலும்

எடுத்துக்காட்டப்பட்டது. இங்கு, கலைஞர்கள், ஓவிய கிராமவாசிகளாக அழைக்கப்படுகின்றனர். ஷிபோஃ கிராமம், கலை மையத்தை விட, பொது மக்கள் மேல் நெருக்கமான உறவு கொண்டது. சாங்சோவிலுள்ள ஷிபோஃ என்னும் கலை சங்கமம் சிறப்பு மிக்கது என்று பெய்ஜிங்கின் கண்காட்சியைத் திட்டமிட்ட சே சிங் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
மாநகரான பெய்ஜிங்கில் கலை அலுவலகங்கள், கலை அடிப்படையாக மட்டுமே உள்ளது. வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பைக் காண்பது அரிது. இங்கு, விவசாயிகளுடன் இணைந்து, நடைமுறை வாழ்க்கையை மிகவும் நெருங்கியுள்ளன. சீனாவில், தனிச்சிறப்பியல்பு மிக்க கலை அலுவலகங்கள் இவை ஆகும். எதிர்காலத்தில் மேலும் அதிகமான வெளிநாட்டு கலைஞர்களை, இவை ஈர்க்கும் என்றார் அவர்.

தற்போது, ஷிபோஃ கிராமத்திலுள்ள கலைஞர்கள் தமது தளங்களை நம்பிக்கையுடன் நிறுவி வருகின்றனர். ஹெ நான் மாநிலத்தில் புகழ்பெற்ற எண்ணெய் ஓவியர்களின் படைப்புகளை விற்பனை செய்யும் முகமாக, முதலாவது ஓவிய விறாந்தை அக்கிராமத்தி்ல கட்டியமைக்கப்பட்டது. கலை விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற துவங்கின. கலைஞர்கள் ஒன்று திரண்டு, சர்வதேச நவீன மிக்க கலைப் போக்கை ஆய்வு செய்கின்றனர்.