• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-17 15:14:10    
சீனாவுக்கான பல்வேறு நாடுகளின் உதவிகள்

cri

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் புனரமைப்பு குறித்து சீனாவிலுள்ள வெளிநாட்டு தூதர்களையும் சர்வதேச நிறுவனங்களின் தொடர்புடைய பிரதிநிதிகளையும் சீனாவுக்கான ஐ.நாவின் பணியகம் 16ம் நாள் வரவழைத்தது. கலந்தாய்வு கூட்டத்தில் அடுத்த 6 திங்களுக்குள் சீனாவுக்கு 3கோடியே 35 லட்சம் அமெரிக்க டாலரை உதவி நிதியாக வழங்குமாறு இப்பணியகம் பல்வேறு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதற்கு பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சிச்சுவான் நிலநடுக்கத்துக்கு பிந்திய புனரமைப்புப் பணியின் மதிப்பீடு வெளியிடப்பட்டது. அடுத்த 6 திங்களில் 9 துறைகளின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான உதவி வழங்கப்படும். அடிப்படை வாழ்வு வசதி, உறைவிடம், நீர் சுகாதாரம், மருத்துவம், கல்வி, பலவீனமான மக்களை காபாற்றுவது, சிறுப்பான்மை தேசிய இன மக்களை காப்பது ஆகியவை இத்துறையில் அடங்கும். சீனாவுக்கான யினிசெப்பின் பிரநிதியும் பேரிடர் நீக்கம் தொடர்பான ஐ.நா நிர்வாக குழுத் தலைவருமான யின்யின்வெ அம்மையார் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அவர் கூறியதாவது. அடுத்த 6 திங்களில் நிலநடுக்கத்தில் உயிர் தப்பியுள்ள அனைவருக்காகவும் இந்த உதவித் தொகை முக்கியமாக பயன்படுத்தப்படும். இந்த உதவி நீண்டகால உதவி திட்டத்தின் முதல் பகுதியாக கருதப்படுகின்றது. இந்த உதவி வேண்டுகோள் விடுக்கப்பட்ட பின் ஐ.நாவும் சீன அரசின் பல்வேறு அமைச்சகங்களும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான மேலுமொரு நீண்டகால புனரமைப்பு திட்டத்தை வகுக்கும் என்று அவர் கூறினார்.


மே 12ம் நாள் சீனாவின் சிச்சுவான் வென்ச்சுவான் பிரதேசத்தில் ரிச்டர் அளவுகோலில் 8 ஆகப் பதிவான நில நடுக்கம் நிகழ்ந்த பின் 70 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். 50 இலட்சம் வீடுகள் இடிந்தன. பாதிக்கப்பட்ட நிலபரப்பு ஒரு இலட்சம் சதுர கிலோமீட்டரை தாண்டியது. 1949ம் ஆண்டுக்கு பிறகு சீனாவில் ஏற்பட்ட மிக கடுமையான சீற்றம் மிகுந்த முதல் நிலநடுக்கம் இதுவாகும். ஆகவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் புனரமைப்பு பணி மிக கடினமான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளது. மாபெரும் நிதி தவிர, முன்னேறிய வெளிநாட்டு தொழில் நுட்பமும் நிர்வாக அனுபவமும் உட்புகுத்தப்படும் நிலைமை உருவாகியுள்ளது. இதுவரை ஐ.நா சீனாவுக்கு ஒரு கோடியே 70 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள உதவி வழங்கியுள்ளது. சிச்சுவான் வென்ச்சுவான் கடும் நில நடுக்கம் சீனாவுக்கு மாபெரும் உயிரிழப்பையும் சொத்திழப்பையும் ஏற்படுத்தியது. ஐ.நா பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் புனரமைப்புக்கு தொழில் நுட்பம் மற்றும் அனுபவம் துறையில் ஆதரவு வழங்க விரும்புவதாக சீனாவுக்கான ஐ.நா இணைப்பாளர் திரு காலிட் மா லிக் தெரிவித்தார்.


இது பற்றி அவர் கூறியதாவது நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிச்சுவான், கான்சு, ஷான்சி முதலிய இடங்களின் புனரமைப்பு அடுத்த 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என்று சீன அரசு தெரிவித்துள்ளது. இதில் சீனாவுக்கு தொழில் நுட்ப ஆதரவையும் முன்னேறிய அனுபவத்தையும் செயல் முறைகளையும் வழங்க ஐ.நா விரும்புகின்றது என்றார் அவர். மீட்புதவி மற்றும் புனரமைப்பில் ஐ.நா செழுமையான அனுபவங்கள் கொண்டுள்ளது. 2005ம் ஆண்டில் பாகிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கம், 2004ம் ஆண்டில் நிகழ்ந்த இந்துமாக்கடல் கொந்தளிப்பு ஆகியவற்றில் ஐ.நா பெற்றுள்ள அனுபவங்கள் நிலநடுக்கத்துக்கு பிந்திய சீனாவின் புனரமைப்பு மற்றும் கட்டுமான பணிகளுக்கு உதவியாக இருக்கும் என்று காலிட் மாலிக் தெரிவித்தார். அத்துடன் சர்வதேச சமூகம் இதில் பங்கு கொள்வதற்கு அவர் வரவேற்பு தெரிவித்தார். இதற்கு முன்பு சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் அமெரிக்க பங்கேற்பாளர்களை சந்தித்தார். சீன அரசு பேரிடர் நீக்கப் பணியில் மனித முதன்மை மற்றும் வெளிநாட்டு திறப்பு என்ற எண்ணத்தில் ஊன்றி நின்று பாதிக்கப்பட்ட மக்களின் தாயக புனரமைப்பில் நாட்டின் அனைத்து மக்களையும் அணிதிரட்டும். அதேவேளையில் சர்வதேச சமூகத்தின் பல்வேறு தரப்புகளின் ஆதரவையும் வரவேற்கும் என்று வென்சியாபாவ் கருத்து தெரிவித்தார்.