நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 919 முதலாவது தொகுதி சீன குழந்தைகள் இன்று ரஷியாவுக்கு புறப்பட்டுச் சென்று, 21 நாள் நீடிக்கும் சிகிச்சை பெறுவார்கள் என்று சீனாவிலுள்ள ரஷிய தூதரகத்தின் தற்காலிகத் தூதர் இகோர் Morgulov இன்று பெய்சிங்கில் தெரிவித்தார்.
சிச்சுவான் நிலநடுக்கம் ஏற்பட்ட பின், சீனாவுக்கு ரஷியா வழங்கும் ஒரு பகுதி உதவி இது வாகும். இந்த குழந்தைகளுக்கு செலவாகும் தொகை முழுவதையும் ரஷியா அளிப்பதோடு, உற்சாகத்தோடு அவர்கள் குணமடைவதற்க்கான சிகிச்சையையும் வழங்கும் என்று Morgulov கூறினார்.
பேரிடர் நீக்கப் பணியில் சீனாவுக்கு உதவி வழங்கிய ரஷிய அரசு மற்றும் மக்களுக்கு சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் நன்றி தெரிவித்தார்.
|