ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை சிக்கனமாக நடத்துவது என்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மக்கள் கவனம் செலுத்தி உற்று நோக்கும் அம்சங்களில் ஒன்றாகும் என்று சீன மக்கள் நாளேடு இன்று வெளியிட்ட விமர்சனக் கட்டுரையில் தெரிவித்தது.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்ட 7 ஆண்டுகாலத்தில், சீனா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைச் சிக்கனமாக நடத்துவது என்ற கோட்பாட்டில் எப்போதும் ஊன்றி நின்றுள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக கட்டப்பட்ட மற்றும் துப்பிக்கப்பட்ட சில விளையாட்டரங்கங்களில், பல சுற்றுச்சூழல் பாதுகாப்பான தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு, அதிக செலவு மற்றும் எரியாற்றல் சிக்கனப்படுத்தப்பட்டன. நகர வசதிகளின் கட்டுமானம் மற்றும் புதுப்பிப்பு பணிகளிலும், பல புதிய உயர் தொழில் நுட்பங்கள் புகுத்தப்பட்டு அமைக்கப்பட்டுள்ளதால் நீண்டகால பயன்பாடு மிக்கவையாக உள்ளன என்று இக்கட்டுரை கூறியது.
|