• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-18 18:04:13    
மானிட வள ஒலிம்பிக்கின் முக்கியத்துவம்

cri

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மூன்று கருத்துக்களில், மானிட வள ஒலிம்பிக் என்ற அம்சம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒலிம்பிக் எழுச்சியை சீனாவின் ஐயாயிரம் ஆண்டுகால பண்பாட்டின் மைய அம்சத்தோடு, இது நெருக்கமாக இணைப்பதோடு, உலகிற்கு, இணக்கம், பரிமாற்றம் மற்றும் வளர்ச்சி என்ற தலைப்பிலான மானிட வள ஒலிம்பிக்கை எடுத்துக்காட்டி, உலக அமைதி, நட்பு மற்றும் முன்னேற்றம் பற்றிய நோக்கத்தை முன்னேற்றியுள்ளது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணி மேற்கொள்ளப்பட்ட போது, மானிட வள ஒலிம்பிக் என்ற கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இது உலகத்துக்கு பெய்சிங் வழங்கும் சிறப்பான ஒலிம்பிக் மரபுச் செல்வமாகும்.

சீனப் பண்பாடு ஐயாயிரம் ஆண்டுகால வரலாறு கொண்டது. பெய்சிங் சீனாவின் வரலாற்றுப் பண்பாட்டு நகரமாகும். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன், பெய்சிங் கட்டியமைக்கப்பட்டது. இதில், பெருவாரியான அரிய தொல்பொருள் சிதிலங்கள் உள்ளன. ஆகையால், பாரம்பரிய பண்பாட்டு மூல வளத்தையும், தேசியப் பண்பாட்டையும் சீனா எடுத்துக்காட்டி, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மூலம் சிறப்பான வரலாற்று பண்பாட்டு மதிப்பை உலகிற்குக் கோடிட்டுக்காட்ட வேண்டும். சீன மக்கள் பல்கலைக்கழகத்தின் மானிட வள ஒலிம்பிக் ஆய்வு மையத்தின் பேராசிரியர் Jin Yuanpu கூறியதாவது:

நாம், ஐயாயிரம் ஆண்டுகால சீன வரலாற்றை பயன்படுத்தி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துகின்றோம் என்றார் அவர்.

2000ம் ஆண்டு முதல், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறுவதை வாய்ப்பாகப் பயன்படுத்தி, 3 ஆண்டுகளில் பெய்சிங் சுமார் 30 கோடி யுவானை ஒதுக்கீடு செய்து, தொல் பொருட்களுக்கான பாதுகாப்பையும் பராமரிப்பையும் மேற்கொண்டது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்த உரிமை பெற்ற பின், 2003ம் ஆண்டு முதல், 5 ஆண்டுகளில் 60 கோடி யுவானை ஒதுக்கீடு செய்து மானிட வள ஒலிம்பிக் தொல் பொருட்களுக்கான பாதுகாப்பு திட்டத்தை பெய்சிங் செயல்படுத்தியது.

பெய்சிங்கின் தொல்பொருள் சிதிலங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், சில ஒலிம்பிக் திடல்கள் மற்றும் அரங்குகளின் கட்டுமானத் திட்டம் சரிப்படுத்தப்பட்டன. எடுத்துக்காட்டாக, பீகிங் பல்கலைகழக அரங்கம் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மேசைப்பந்து போட்டி அரங்கமாகும். தொண்மை வாய்ந்த கட்டிடத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், அதன் வடிவமைப்பு தொடர்ந்து 2 முறை சரிப்படுத்தப்பட்டது என்று பீகிங் பல்கலைகழக அரங்கத்தின் தலைமை வடிவமைப்பாளர் Tang Suoning கூறினார். அவர் கூறியதாவது:

பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் கோரிக்கையின் படி, தொண்மை வாய்ந்த மரங்களின் நிழலிலிருந்து 3 மீட்டர் தொலைவுக்குள் எந்த கட்டிடங்கள் அமைக்கப்பட கூடாது. பாதுகாப்பட்ட பழைய கட்டிடங்களும் மரங்களும் ஒலிம்பிக் திடல்கள் மற்றும் அரங்குகளுக்கு இசைவான இயற்கைக் காட்சியாக மாறியுள்ளன என்றார் அவர்.

தனிச்சிறப்பு வாய்ந்த சீன மானிட வளத்தை முழுமையாக வெளிப்படுத்தும் வகையில், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் சின்னங்கள், வில்லை மற்றும் தீபத்தின் வடிவமைப்பில், சீனாவின் வேலைப்பாடு சேர்க்கப்பட்டது என்று, புகழ் பெற்ற சீன நுண்கலை விமர்சகர் Shui Tian கூறினார். அவர் கூறியதாவது:

நாம் முன்வைத்த குட்டி நண்பர்கள் என்ற மங்கள பொம்மைகள், நட்பு, உயிராற்றல் மற்றும் சுறுசுறுப்பினை வெளிப்படுத்தின என்றார் அவர்.

முதல் தர மானிட வள ஒலிம்பிக் சூழலை உருவாக்கும் வகையில், மக்களின் கல்வி அறிவை உயர்த்தும் நடவடிக்கைகளை பெய்சிங் மேற்கொண்டது என்று சீன மக்கள் பல்கலைக்கழகத்தின் மானிட வள ஒலிம்பிக் ஆராயிச்சி மையத்தின் பேராசிரியர் Zhen Xiaojiu கூறினார். அவர் கூறியதாவது:

கடந்த சில ஆண்டுகளில், பெய்சிங் நகரவாசிகளின் கண்ணிய நடத்தை மற்றும் பண்பை நாங்கள் உயர்த்தி வருகின்றோம். கண்ணிய நடத்தை, ஒழுங்கு முறை, சூழல் பண்பாடு, சேவை பண்பாடு முதலிய துறைகளில் மக்களின் நிலையை உயர்த்த முயற்சி மேற்கொள்வதோடு, மகிழ்ச்சியூட்டும் சாதனைகளைப் பெற்றுள்ளோம். 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் போது, உலகத்துக்கு மேலும் சிறப்பான பண்பாட்டினையும், நாகரீகத்தையும் பெய்சிங் நகரவாசிகள் எடுத்துக்காட்டுவார்கள் என்றார் அவர்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறுவது, பெய்சிங்கின் உறைவிடச் சூழலை மேம்படுத்தி, நவீனமயமாக்கம் அடிப்படையில் நனவாவதை முன்னேற்றுவதோடு, சீனத் தேசிய மற்றும் உலகப் பண்பாடுகளுக்கிடையிலான பரந்த பரிமாற்றத்தையும் ஒன்றிணைப்பையும் தூண்டும்.