13ம் நூற்றாண்டின் இறுதியில், யுவான் வம்சம் சீனாவை ஒன்றிணைத்தது. திபெத், சீனாவின் யுவான் வம்ச நடுவண் அரசு நேரடி ஆட்சி செய்த நிர்வாக பிரதேசங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
14ம் நூற்றாண்டின் பாதியில், திபெத்தின் சாகா ஆட்சி படிப்படியாக வீழ்ச்சியடைந்தது. அதே வேளையில், திபெத் மரபுவழி புத்தமதத்தைச் சேர்ந்த பாக்சு கெக்யு பிரிவு, ஆட்சியாளராக மாறியது. அரசியல் மற்றும் மத ஒருமைப்பாட்டு முறைமையான பாக்சு உள்ளூர் ஆட்சி உருவாக்கப்பட்டது. யுவான் வம்சத்தின் நடுவண் அரசு இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு, திபெத்தை தொடர்ந்து ஆட்சி செய்யுமாறு பாக்சு ஆட்சிக்கு உரிமையளித்தது..
14ம் நூற்றாண்டின் இறுதியில், சீனாவின் மிங் வம்சம் நிறுவப்பட்டது. மிங் வம்சம், மதப்பிரிவுகளின் தலைவருக்கு உரிமையளித்ததோடு, திபெத் மீதான யுவான் வம்சத்தின் நிர்வாக அனுபவத்தையும் பயன்படுத்தியது.
17ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சிங் வம்சம் மிங் வம்சத்தை தோற்கடித்த பின், திபெத்தின் அரசிரமை மீதான நிர்வாகத்தை, சிங் நடுவண் அரசு மேலும் வலுப்படுத்தியதோடு, இந்த நிர்வாகத்தை மேலும் முறைமை மற்றும் சட்ட மயமாக்கியது. 1652ம் ஆண்டு, அழைப்பை ஏற்று, 5வது தலாய் லாமா பெய்சிங்கிற்கு சென்று சுன் சீ மன்னரைச் சந்தித்துரையாடினார். அடுத்த ஆண்டில், சுன் சீ மன்னர் தலாய் லாமாவை தலைவராக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். 1713ம் ஆண்டு, காங் சி மன்னர், 5வது பான்ச்சென் லாமாவை பான்ச்சென் எர்தெநி எனும் தலைவராக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். அதற்கு பின், கெலுக் பிரிவைச் சேர்ந்த 2 பெரும் வாழும் புத்தர்கள் திபெத்தை ஆட்சி செய்ய துவங்கினர்.
1927ம் ஆண்டு நடுவண் அரசின் சார்பாக, திபெத்தின் உள்ளூர் ஆட்சியைக் கண்காணிக்குமாறு சிங் வம்சம் திபெத்தில் அமைச்சரை நியமிக்க துவங்கியது. திபெத்திற்கும் சி ச்சுவான்,யுன் னான், சிங் காய் ஆகிய மாநிலங்களுக்கும் இடையில் எல்லைகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டன. 1793ம் ஆண்டு, திபெத்திலுள்ள அமைச்சரின் அதிகாரம், தலாய் லாமா,பான்ச்சென் மற்றும் இதர பெரும் வாழும் புத்தர்களின் மறுபிறப்புகள், எல்லை ராணுவ பாதுகாப்பு, வெளிநாட்டு விவகார எதிர்ப்பு, நிதி மற்றும் வரி, நாணய வார்ப்பு மற்றும் நிர்வாகம் முதலிய 29 அம்சங்கள் அடங்கிய திபெத் நிர்வாக விதிகளை, சிங் வம்சம் வெளியிட்டது. அதற்கு பிந்திய 100க்கு அதிகமான ஆண்டுகளில், அந்த 29 விதிகள் உறுதிப்படுத்திய அடிப்படை கோட்பாடு, திபெத்தின் நிர்வாக அமைப்பு முறை மற்றும் சட்ட விதிகளின் வரையறையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
|