• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-18 09:33:24    
நாட்டிய கலைஞர் Yang Li Ping அம்மையார்

cri

Yang Li Ping அம்மையார், சீனாவின் புகழ் பெற்ற நடன கலைஞர் ஆவார். 1958ஆம் ஆண்டு யுன்னான் மாநிலத்தில் உள்ள Er Yuan என்னும் இடத்தில் அவர் பிறந்தார். Bai இனத்தை சேர்ந்த அவருக்கு இரண்டு தங்கைகளும், ஒரு தம்பியும் உண்டு. குழந்தை பருவத்தில் Yang Li Pingவின் குடும்பம் வறுமையாக இருந்தபோதிலும், அவரும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் வாழ்ந்த ஊரில், இயற்கைக் காட்சிகள் எழில் மிக்கவை. தெளிந்த ஆற்று நீர் ஓடுகின்றது. மலை சரிவிலும், ஆற்றங்கரையிலும் மக்கள் மாடுகளையும், குதிரைகளையும் மேய்த்தனர். சூரியகாந்தி பூக்கள் எங்கும் காணப்பட்டன. இவ்வாறு அருமையான

சூழலில் வாழ்ந்ததால், Yang Li Pingக்கு இன்ப சூழ்நிலை உணர்வுகளே உள்ளத்தில் குடி கொண்டிருந்தது.
Yang Li Ping அம்மையார், Bai இனத்தைச் சேர்ந்தவர். Bai இனத்தவர்கள், சிறு வயதிலிருந்தே இயற்கைக்கு மதிப்பு அளித்து வளர்கின்றவர்கள். Yang Li Pingவின் ஊரில், Bai இன மக்களின் வாழ்க்கையில் நடனம் ஒரு பகுதியாக கருதப்படுகின்றது. நடன கலையின் மூலம், இயற்கை மற்றும் அருமையான வாழ்க்கை மீதான விருப்பம் மற்றும் அன்பை Bai இன மக்கள் வெளிப்படுத்துவதுண்டு.
சிறு வயதில், Yang Li Ping வயல் வேலையில் தமது தாய்க்கு உதவி செய்தார். உழைப்பு, ஒரு வகை நடனம் என்று தற்போது அவர் கருதுகின்றார். "எடுத்துக்காட்டாக, மிருகத்தைத் துரத்தித்துரத்தி அடிப்பது, வயலில் காய்கறி பயிரிடுவது ஆகிய வாழ்க்கையிலான காட்சிகள், நடனத்தில் வெளிப்படுகின்றன"

என்று அவர் கூறினார்.
சிறு வயதிலிருந்தே அவர் நடனத்தை நேசித்தார். நடனத்தை அவர் பள்ளிகளில் கற்றுக்கொள்ளவில்லை. 1971ஆம் ஆண்டு, Xi Shuang Ban Na சோவின் இசை நடனக் குழுவில் அவர் சேர்க்கப்பட்டார். 1980ஆம் ஆண்டு சீன மத்திய தேசிய இன இசை நடனக் குழுவில் அவர் சேர்ந்தார். இக்குழுவில் மயில் என்ற நடனத்தை அவரே உருவாக்கி ஆடினார். நடனம் மூலம், மயிலின் அழகை முழுமையாக வெளிப்படுத்த முடியும் என்பது அவரது உறுதியான கருத்து. சிறு வயதில், மயில் இளவரசி பற்றிய அருமையான செவி வழிக் கதையை அவர் கேட்டார். அக்கதையின் படி, எழில் மிக்க ஓர் ஏரியில், தாமரை பூக்களும், மயில்களும் வாழ்கின்றன. "இத்தகைய இடம் எங்கே?" என்று Yang Li Ping, தமது இசை நடனக் குழுவின் ஒரு மூத்த உறுப்பினரிடம் கேட்டார். அவர்கள் அத்தகைய இடத்தை நாடி சென்றனர். பின்னர், ஒரு அழகான ஏரியை கண்டுபிடித்தனர். அந்த ஏரிக்கு அருகில், அதிக மயில்கள் காணப்பட்டன.

மயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக தோகையை விளித்தாடின. பெருமையோடு ஆடிய மயிலின் அந்த அழகான காட்சிகளைக் கண்டு, மக்கள் வியப்படைந்தனர். தான் கண்டுகளித்த இந்த மயிலின் நடனக் காட்சிகளை கொண்டு மயில் என்ற நடனத்தை Yang Li Ping படைத்தார். பின்னர் நாடளவில் நடைபெற்ற நடனப் போட்டியில் மயில் நடனத்தை ஆடினார். போட்டியில், மயில் நடனம், முதல் பரிசு பெற்றது. அது முதல், மயில் நடனத்தால், Yang Li Ping அம்மையார் சீனாவில் புகழ் பெற்றார். 1988ஆம் ஆண்டு, "பெய்சிங் நாளேடு தேர்ந்தெடுத்த சிறந்த" பத்து பிரமுகர்களில் ஒருவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989ஆம் ஆண்டு, "Yang Li Pingவின் நடனக் கலை" என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சி வெளியிடப்பட்டது. Mao Xiang மற்றும் Dao Mei Lanஐ அடுத்து, Yang Li Ping அம்மையார், "சீனாவின் இரண்டாவது தலைமுறை மயில் நடனமாடுபவராக" அழைக்கப்படுகின்றார். கடந்த பல ஆண்டுகளாக, உலகிலுள்ள பல நாடுகளில் அவர் பயணம் செய்து, கலை பரிமாற்ற நடவடிக்கைகளில் பங்கெடுத்துள்ளார். பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், ரஷியா, அமெரிக்கா, கனடா, தைவான், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில், அவர் நடன அரங்கேற்றங்களை நடத்தியிருக்கின்றார்.

யுன்னான் மாநிலத்தில் பிறந்தது தமக்கு அதிர்ஷ்டம் தந்ததாக அவர் கருதுகின்றார். அந்த அற்புதமான இடத்தில், பல சிறுபான்மை தேசிய இனங்கள் வாழ்கின்றன. அங்குள்ள பாடல்களும் நடனங்களும் அதிகமாக இருக்கின்றன. மக்கள், அன்பை வெளிப்படுத்தும் விதமாக மயில் நடனத்தை ஆடுகின்றனர். அறுவடையைக் கொண்டாட, பாடல்களை பாடுகின்றனர். சுமார் ஓராண்டுகாலத்தில், Yang Li Ping யுன்னான் மாநிலத்தில் சோதனைப் பயணம் மேற்கொண்டார். அம்மாநிலத்தில் உள்ள மிக பெரும்பாலான இடங்களுக்கு அவர் சென்றுவிட்டார். யுன்னான் மாநிலத்தில் பயணம் மேற்கொண்ட நாட்களில், ஒரு புறம் இசை நடன கடலில் மூழ்கியதோடு, மறு புறம், ஆழ்ந்த கவலையும் அவருக்கு ஏற்பட்டது. நவீன பண்பாட்டின் பாதிப்பால், அதிக நடனங்களும் பாடல்களும் அழியும் அபாயத்தில் சிக்கிக்கொண்டுள்ளதே அவரது கவலைக்கு காரணமாகும். இந்நிலைமையை தடுக்கும் பொருட்டு, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள எண்ணினார். அரிய சிறுபான்மை தேசிய இன நடனங்களையும் பாடல்களையும் அரங்கேற்ற வடிவத்தின் மூலம் பதிவு செய்யும் வகையில், நிதித்தொகை இல்லாத நிலைமையில், Yang Li Ping தமது சொந்த பணத்தை செலவிட்டு, நடனத்தை படைத்து பயிற்சி செய்தார். பின்னர், "யுன்னான் காட்சிகள்" என்னும் நடன நிகழ்ச்சி உருவாக்கப்பட்டது.

மனித இயல்பு, சிறுபான்மை தேசிய இனத் தனிச்சிறப்பு மற்றும் மனித எழுச்சியை முழுமையாக வெளிப்படுத்தும் இந்த நடனங்களில், நடனமாடுபவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். கிராமங்களில் வாழும் விவசாயிகளை, நடனம் ஆடுபவர்களாக அவர் தேர்வு செய்தார். ஏனெனில், அன்பு மற்றும் உயிருக்காக ஆடும் அவர்கள் மட்டுமே, அந்நடனத்தின் எழுச்சியை மிக நன்றாக வெளிப்படுத்த முடியும் என்று நம்பினார். பார்வையாளர்கள் அந்த நடனத்தைக் கண்டு இரசிப்பதன் மூலம், கலை எழுச்சியையும், உலகமயமாக்க நிலைமையில் தேசிய இனப் பண்பாட்டைக் கையேற்று, வளர்க்கும் வழிமுறையையும் தேட வேண்டும் என்று Yang Li Ping அம்மையார் விருப்பம் தெரிவித்தார்.