• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-18 09:36:06    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு சீனாவிலுள்ள ஸ்பெயின் தூதரின் நல்வாழ்த்துக்கள் 2

cri
அமைதிக்கான உலக மக்களின் எதிர்ப்பார்ப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியாகும். ஒலிம்பிக் கொடி பல்வேறு இனம், அரசியல், மதம் மற்றும் சமூக மக்கள் ஒன்றுப்பட்டு, சமாதான சக வாழ்வை நிலைநிறுத்தி வருவதை குறிக்கின்றது. புரிந்துணர்வு, ஒற்றுமை, சமாதான சக வாழ்வு ஆகியவை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முக்கிய இலக்கும் நோக்கமுமாகும் என்றார் அவர்.

ஒலிம்பிக் விளையாட்டு முழு மனித குலத்தின் விளையாட்டுப் போட்டியாகும். சீனா உள்ளிட்ட முழு உலகமே ஒலிம்பிக் தீபத்தைக் கொண்டு வருகின்றன என்று Carlos நம்பிக்கை தெரிவித்தார். ஒரு சில வெளிநாட்டவர்கள் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்டத்தை சீர்குலைத்த நடவடிக்கைகளை அவர் வன்மையாகக் கண்டித்தார். அத்துடன், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை அரசியல் மயமாக்குவதை எதிர்க்கும் ஸ்பெயின் அரசின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப்

போட்டியின் தீபத் தொடரோட்டத்தை சீர்குலைத்த நடவடிக்கைகள் நகைப்பிற்கிடமானது. ஒலிம்பிக் தீபம் அமைதியின் சின்னமாகும். ஒலிம்பிக் தீபத்தைத் தடுப்பதற்கு காரணமே இல்லை. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி அனைத்து விளையாட்டு வீரர்களின் மேன்மை போட்டியாகும் என்றார் அவர்.
அனைத்து ஸ்பெயின் வீரர்களை பொறுத்த வரை, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வது என்பது அவர்களின் கனவாகும். இதற்கு அவர்கள் மாபெரும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். பல்வேறு தரப்புகளின் ஒருங்கிணைப்பில்,

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு ஸ்பெயின் ஒலிம்பிக் கமிட்டி முன்னேற்பாடு மேற்கொள்கின்றது என்று Carlos தெரிவித்தார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 16 பதக்கங்களைப் பெற ஸ்பெயின் பிரதிநிதி குழு விரும்புகின்றது என்றும் அவர் வெளியாக்கினார்.