பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வள்ள ஓட்டப் பந்தயத்தின் வெற்றியாளர்களுக்கு பதக்கமளிக்கும் விழா, கடற்பரப்பில் வைத்து நடத்தப்படும். ஒலிம்பிக் வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.
இன்று நடைபெற்ற பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியுடன் தொடர்புடைய நகரங்களின் ஆயத்தப்பணி பற்றிய செய்தியாளர் கூட்டத்தில் பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவைச் சேர்ந்த வள்ள ஓட்டப் பந்தய கமிட்டியின் துணைத் தலைவர் Zang Aimin அம்மையார் இவ்வாறு தெரிவித்தார்.
வள்ள ஓட்டப் பந்தயத்தை நடத்தவுள்ள சிங் தாவ் நகரம், கடலில் பதக்கமளிக்கும் மேடையை சிறப்பாக உருவாக்கியுள்ளது. பார்வையாளர்கள் நிற்கும் கரையிலிருந்து சில பத்து மீட்டர் தொலைவில் இம்மேடை அமைக்கப்படுகிறது என்று தெரிய வருகின்றது.
கடலில் பதக்கமளிப்பு விழா நடைபெறுவது என்பது, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் ஒரு பெரிய புதுமையாகும் என்று சர்வதேச வள்ள ஓட்டப் பந்தய சம்மேளனத்தின் தொடர்புடைய பிரமுகர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
|