ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமையை பெய்ஜிங் வெற்றிகரமாகப் பெற்ற பின், அறிவியல் தொழில் நுட்பம் மிகுந்த ஒலிம்பிக் என்ற கண்ணோட்டத்தோடு, முன்னேறிய அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கச் சாதனைகளின் கனிகளை சீன அறிவியல் தொழில் நுட்பத் துறை, பயன்படுத்தி வருகிறது. சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் lichaochen, இன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இதைத் தெரிவித்தார்.
அறிவியல் தொழில் நுட்பம் வாய்ந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் வகையில், பல புதிய அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்தை அறிவியல் தொழில் நுட்பத்துறை வளர்த்து பயன்படுத்தியுள்ளது. இமயமலை சிகரத்தில் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நடவடிக்கை, தூய்மையான எரியாற்றல், இயற்கைச் சூழல் முதலிய துறைகளில் இந்தப் புத்தாக்கங்கள் முக்கிய பங்காற்றி, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பன்முக தொழில் நுட்ப ஆதரவை வழங்குகிறன.
|