சீனா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக ஆயத்தம் செய்யும் ஆற்றலை சீனாவிலுள்ள பிரேசில் தூதர் Luiz Augusto de Castro Neves வியப்புடன் பாராட்டினார். அவர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, பெய்ஜிங் மற்றும் முழு சீனாவிலும் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை கண்ட சாட்சி ஆவார். அண்மையில் சீன வானொலி நிலையத்தின் செய்தியாளருக்குச் சிறப்புப் பேட்டியளிக்கும் போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சீனாவிலுள்ள பிரேசில் தூதராக கடந்த 4 ஆண்டுகாலத்தில், நாள்தோறும் அவர் சுற்றுச்சூழலின் மாற்றங்களைக் கண்டறிந்தார்.
பெய்ஜிங்கின் மாற்றங்கள் என் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன. 2004ம் ஆண்டின் பெய்ஜிங்கை இன்றைய பெய்ஜிங்குடன் ஒப்பிட்டு பார்த்தால், முழுமையாக வேறுபட்டது. பிரேசிலுக்குச் சென்று, விடுமுறையைக் கழித்து ஒவ்வொரு முறை, சீனாவுக்கு மீண்டும் திரும்பும் போது, குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டுள்ளேன். பெய்ஜிங் மென்மேலும் அழகாக மாறி வருகிறது. இங்குள்ள வாழ்க்கை, மென்மேலும் வசதியாகியுள்ளது என்று அவர் கூறினார்.
தவிர, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிகளை, அவர் வெகுவாகப் பாராட்டினார். சீனா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக ஆயத்தம் செய்த வேகம் மற்றும் ஆற்றல், மக்களை வியப்படையச் செய்கின்றன. அது, பிரேசில் Rio de Janeiro, 2016ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்த விண்ணப்பிப்பதற்கு, சிறந்த எடுத்துக்காட்டாகவுள்ளது என்று அவர் கருத்து தெரிவித்தார்.
பேட்டியின் முடிவில், அவர் சீன மொழியில் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான வாழ்த்துக்கள் மற்றும் எதிர்பார்ப்பைத் தெரிவித்தார்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைப் பயன்படுத்தி, சீனாவை உலகத்துக்குத் திறப்பதோடு, உலகத்தை சீனாவுக்குத் திறக்கச் செய்ய வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
|