• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-21 18:03:10    
சின்ச்சியாங் சர்வதேச தேசிய இன நடன விழா

cri

உய்கூர் mukam கலை, சின்ச்சியாங் உய்கூர் மக்களின் தலைசிறந்த இசை படைப்பாகும். கீழை இசையின் முத்து என்ற புகழ் இந்த இசைப் படைப்புக்கு சூடப்பட்டது. 2005ம் ஆண்டு, நவம்பர் திங்கள் 25ம் நாள், சீனாவின் சின்ச்சியாங் உய்கூர் mukam கலை, ஐ.நாவின் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவத்தால் மனிதக் குலத்தின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1989ம் ஆண்டு, சின்ச்சியாங் உய்கூர் mukam கலைக் குழு நிறுவப்பட்டது. இக்கலை வடிவத்தைக் கையேற்றுவது, சீர்ப்படுத்துவது மற்றும் ஆராய்ச்சி செய்வதற்கான சிறப்புக் கலைக் குழு இது ஆகும். உய்கூர் mukam கலையில் சீன அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. உய்கூர் mukam கலை பாதுகாப்பு இடங்கள், திறமைசாலிகளைப் பயிற்றுவிக்கும் இடங்கள் முதலியவை சின்ச்சியாங் தன்னாட்சி பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் காணப்படலாம்.

mukam கலையை ஆராயும் இளங்கலை மற்றும் பட்டப்படிப்பின் வகுப்புகளை சின்ச்சியாங் கலை கழகம் நடத்துகிறது. சின்ச்சியாங் சர்வதேச தேசிய இன நடன விழாவில், mukam கலையை பன்முகங்களில் வெளிப்படுத்தும் வகையில், இக்கலைக் குழுவின் 152 நடன கலைஞர்கள் முன்கூட்டியே சுறுசுறுப்புடன் பயிற்சி செய்தனர் என்று இக்குழுவின் தலைவர் maimaiti தெரிவித்தார்.

சீனாவுக்கு வந்து கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றும் வகையில், ரஷியா, எகிப்து உள்ளிட்ட 5 கண்டங்களைச் சேர்ந்த 9 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் நடன கலைஞர்களுக்கு இவ்வாண்டின் சின்ச்சியாங் சர்வதேச தேசிய இன நடன விழா அழைப்பு விடுத்தது. பல்வேறு நாடுகளின் மக்கள், பரஸ்பர தேசிய இனத்தின் பண்பாடுகளை அறிந்துகொள்வதற்கு சிறந்த மேடை ஒன்றை இந்த நடன விழா வழங்குகிறது என்று மெக்சிகோ கலைக் குழுவின் தலைவர் Antonio கூறினார்.

நண்பர்களே, சின்ச்சியாங் சர்வதேச தேசிய இன நடன விழா என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.