திபெத், சீனாவிலிருந்து பிரிக்கப்பட்ட முடியாத ஒரு பகுதியாகும். கடந்த ஆயிரம் ஆண்டுகளாக திபெத் உடன்பிறப்புகள், திபெத் வளர்த்து கட்டுப்படுத்துவதற்கு மாபெரும் பங்காற்றினர். ஆனால், அபினி போருக்கு பின், ஏகாதிபத்திய சக்தி திபெத்தில் நுழைந்தது, அப்போதைய கோ மின் தாங் கட்சி அரசின் பிறபோக்கான ஆட்சியினால், திபெத் உள் பகுதி பிளவுபடுத்தப்பட்டது.
1949ம் ஆண்டு சீனாவின் புரட்சி இலட்சியம் வெற்றி பெற்றது. திபெத், தைவான் ஆகியவற்றை தவிர, சீனாவின் இதர இடங்கள் விடுதலை பெற்றன. திபெத் மக்களை விடுதலை செய்து, திபெத்தை தாய்நாட்டின் பெருநிலப்பகுதி குடும்பத்துக்கு திரும்ப செய்யும் வகையில், சீன நடுவண் அரசு, அப்போதைய திபெத் அதிகார வட்டாரத்தின் முழு அதிகாரம் கொண்ட பிரதிநிதிகளுடன் பெய்சிங்கில் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது தான், நீண்டகாலமாக அழங்கி கிடந்த நாட்டுப்பற்று எழுச்சி விரைவாக அதிகரித்தது. 10வது Panchen லாமா சீன நடுவண் அரசுக்கு முதன்முதலில் ஆதரவு தெரிவித்தார். அதன் பின், திபெத்தை அமைதியான முறையில் விடுதலை செய்வது பற்றிய சீன அரசின் ஆலோசனையை 14வது தலாய் லாமா ஏற்றுகொண்டார். அது, பேச்சுவார்த்தைக்கு அடிப்படையை உருவாக்கியது.
அப்பேச்சுவார்த்தைக்கு பின், திபெத்தை அமைதியான முறையில் விடுதலை செய்வது குறித்து, சீன அரசு மற்றும் திபெத் அதிகார வட்டார பிரதிநிதிகள் ஒத்த கருத்துக்கு வந்தனர்.
1951ம் ஆண்டு மே 23ம் நாள், திபெ அமைதியான முறையில் விடுதலை செய்யும் வழிமுறைகள் பற்றிய சீன நடுவண் அரசு மற்றும் திபெத் அதிகார வட்டாரத்தின் உடன்படிக்கை பெய்சிங்கில் அதிகாரப்பூர்வமாக கையொழுத்தானது
திபெத் இனம் சீனாவின் நீண்டகால வரலாற்றை கொண்ட தேசிய இனங்களில் ஒன்றாகும். தாய்நாட்டு பெரிரு நிலப்பகுதி குடும்பத்தின் ஒரு உறுப்பாகும். திபெத் மக்களின் மத நம்பிக்கை பாதுகாக்கப்படுவது. ஏகாதிபத்திய சக்தியை திபெத்தை விட்டு வெளியேற செய்வது. சீன மக்கள் விடுதலைப் படை நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த திபெத் உள்ளூர் அரசு ஆக்கப்பூர்வமாக உதவி செய்வது. சீன அரசாட்சியில் திபெத்தில் தேசிய இன பிரதேசத்தின் தன்னாட்சியை நடைமுறைப்படுத்துவது, வேளாண் மற்றும் கால் நடை வளர்ப்பு, தொழில் துறை, வர்த்தகம், பண்பாடு, கல்வி முதலியவற்றை வளர்த்து, திபெத் மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது முதலியவை இவ்வுடன்படிக்கையின் உள்ளடக்கங்களாகும். தவிரவும், திபெத்தின் வெளிநாட்டு விவகாரங்களுடன் தொர்புடைய அனைத்து அலுவல்களையும் சீன நடுவண் அரசு கையாள வேண்டும் என்பது இவ்வுடன்படிக்கையில் குறிப்பிட்டத்தக்கது.
|