• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-21 09:17:09    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு சீனாவிலுள்ள ஸ்பெயின் தூதரின் நல்வாழ்த்துக்கள் 3

cri
ஸ்பெயின் ஒலிம்பிக் பிரதிநிதிக் குழுவின் பல அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பெய்சிங்கிற்கு வந்து பல்வேறு அளவீடு மற்றும் சோதனை போட்டிகளில் பங்கெடுத்துள்ளனர். டென்னிஸ், அம்பு எய்தல், வாள்வீச்சு முதலிய நிகழ்ச்சிகளில் நாங்கள் மேம்பாட்டை கொள்கின்றோம். 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஸ்பெயின் பிரதிநிதிக் குழு குறைந்தது 16 பதக்கங்களை பெறும் என்று நான் நம்புகின்றேன். சீனாவுக்கு வந்து ஒலிம்பிக்

விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து ஸ்பெயின் வீரர்களும் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்வார்கள். ஒலிம்பிக் பதக்கங்கள் பெற அவர்கள் விரும்புகின்றார்கள் என்றார் அவர்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஒரு மாபெரும் விழா மட்டுமன்றி பல பண்பாடுகளுக்கிடையில் பரஸ்பர பரிமாற்றத்தின் சிறந்த வாய்ப்பும் ஆகும். நிறைவடைந்த சீன-ஸ்பெயின் பண்பாட்டு ஆண்டு மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மூலம், சீன மக்களிடம் ஸ்பெயினை மேலும் விவரித்து விளக்கமளிக்க சீனாவிலுள்ள ஸ்பெயின் தூதரகம் விரும்புகின்றது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் போது, ஸ்பெயின் ஒலிம்பிக் பிரதிநிதி

குழு சாங் ஆன் பொழுதுபோக்கு நிலையத்தில் தற்காலிக ஸ்பெயின் வீட்டை உருவாக்கும். செய்தியாளர் கூட்டம், விருது வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட சமூக மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகள் இதில் நடைபெறும். சீன மக்களுக்கு ஸ்பெயின் சுற்றுலா, உணவு பொருள், பண்பாடு, கட்டடக்கலை ஆகியவற்றை விவரிக்கும் என்றார் அவர்.
கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சீன மக்களுக்கு ஸ்பெயின் அரசு மற்றும் மக்களின் இரங்கலையும் ஆறுதலையும் Carlos பாலங்கோ தெரிவித்தார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறும். அத்துடன், பதக்க

வரிசையில் சீனா வரலாற்று முன்னேற்றத்தைப் பெற வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்தார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி அமைதியாக வெற்றிகரமாக நடைபெறுவது உறுதி. உபசரிப்பு நாட்டைச் சேர்ந்த சீன வீரர்கள் மேலதிக மேம்பாடுகளைக் கொள்ளுவார்கள். பார்செலோனிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், ஸ்பெயின் பிரதிநிதிக் குழு பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை வரலாற்றில் மிக அதிகமாகும். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், உபசரிப்பு நாட்டைச் சேர்ந்த சீன பிரதிநிதிக் குழு பெறும் பதக்கங்களின் எண்ணிக்கை வரலாற்றில் மிக அதிகமாகும் என்று நான் நம்புகின்றேன் என்றார் அவர்.
இத்துடன் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுச் செய்திகள் நிறைவு பெறுகின்றன.