• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-21 19:51:35    
வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் சீனா

cri

ஒலிம்பிக்கை நடத்தும் அதிகாரத்தைப் பெற்ற கடந்த 7 ஆண்டுகளில், பசுமை ஒலிம்பிக், அறிவியல் தொழில் நுட்பம் மிகுந்த ஒலிம்பிக், மானித மைய ஒலிம்பிக் என்ற மூன்று கருத்துக்களை சீனா முழுமையாக நடைமுறைப்படுத்தி, ஒலிம்பிக்கிற்கான ஆயத்தப்பணிகளை செவ்வனே செய்து, சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுத் தலைவர் திரு லீயு ச்சியின் கூற்றை மேற்கோள் காட்டி, இன்றைய மக்கள் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 7 ஆண்டுகளில், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, பெய்ஜிங் சுமார் 200 நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. காற்று தரம் ஆண்டாண்டு மேம்பட்டு வந்துள்ளது. முன்னேறிய அறிவியல் தொழில் நுட்ப சாதனைகள், ஒலிம்பிக் திடல்கள் மற்றும் அரங்கங்களின் கட்டுமானத்திலும் ஆயத்தப்பணிகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, எரியாற்றல் சிக்கனம் மிகுந்த கட்டிடங்கள், சுற்றுச்சூழல் மற்றும் உயிரின பாதுகாப்பு, மூலவளத்தின் தொடரவல்ல பயன்பாடு முதலிய துறைகளில் குறிப்பிட்ட பயன்களைப் பெற்றுள்ளன. அதேவேளை, ஒலிம்பிக் பண்பாட்டு மற்றும் கல்வி நடவடிக்கைகளை ஆழமாக விரைவுபடுத்தி, முழு சமூகத்திலும் ஒலிம்பிக் எழுச்சியை பரந்த அளவில் பரப்பியது என்று லீயு ச்சி அறிமுகப்படுத்தினார்.