• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-22 10:27:36    
சி மா தை பெருஞ் சுவர் (அ)

cri

அதிர்ச்சி, ஆபத்து, விசித்திரம் ஆகியவற்றால் புகழ்பெற்ற சி மா தை பெருஞ் சுவர், பெய்ஜிங்கின் மி யுவுன் மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதியிலுள்ள கூ பெய் கோ வட்டத்தில் அமைந்துள்ளது.

இதன் மொத்த நீளம், 19 கிலோமீட்டர் ஆகும். இதில், 35 தற்காப்புக் கோபுரங்கள் உள்ளன. இது, மிங் வம்சத்தில் கட்டியமைக்கப்பட்டப் பெருஞ் சுவர் பகுதியாகும்.

மிங் வம்சக்காலத்தில் புகழ்பெற்ற தளபதியான தேசிய வீரர் ச்சி சி குவாங், அங்கு ஆட்சி புரிந்த போது, இது கட்டியமைக்கப்பட்டது. இது, ஐ.நா.வின் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனத்தால் ஆதிகாலப் பெருஞ் சுவராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அது, சி மா தை நீர்த்தேக்கத்தை எல்லையாகக் கொண்டு, கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேற்குப் பகுதியிலுள்ள மலை, தட்டையாக இருக்கிறது. 20 தற்காப்புக் கோபுரங்கள் நன்றாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன.கிழக்குப் பகுதியிலுள்ள பெருஞ் சுவர், வளைந்ததாக அமைந்திருக்கிறது. அதில் 15 தற்காப்புக் கோபுரங்கள் நிற்கின்றன.

இந்தக் கோபுரங்களில், தேவதை என்ற ஒரு கோபுரம், எழில் மிக்கது. வெண் கற்களால் அமைக்கப்பட்ட வாயிலில், தாமரைகள் செதுக்கப்பட்டுள்ளன.

தேவதை என்ற இந்த கோபுரத்துக்குப் பின், நூறு மீட்டர் நீளமுள்ள, ஒரு செங்கல் அகல வான் பாலம் இருக்கிறது. இப்பாலத்தின் இரு பக்கங்களிலும், செங்குத்தான பாறைகள் இருக்கின்றன. இப்பாலத்தை கடக்கக் கூடியவர்கள், உண்மையான வீரர்களாகக் கருதப்படுகின்றனர்.

இந்தக் கோபுரங்களில், வாங் சிங் என்ற கோபுரம், பெய்ஜிங்கின் மிக உயரமான இடமாகும். அது, கடல் மட்டத்திலிருந்து 986 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.