• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-24 18:53:54    
கலையரசி

cri
வணக்கம் நண்பர்களே. நான் தி. கலையரசி. சீன பெயர் ஜு ஜியான் குவா. தமிழ் இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நான் 1975ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் ஷாங்காய் அயல் மொழி பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி துறையிலிருந்து பட்டம் பெற்று பீக்கிங் வானொலியின் ஆங்கில பிரிவில் பணி நியமணம் பெற்றேன். தமிழ் ஒலிபரப்பு இலட்சியத்தின் வளர்ச்சியின் தேவைக்கு ஏற்ப அவ்வாண்டின் அக்டோபர் திங்களில் தமிழ் கற்க துவங்கினேன். யாழ்பாணத்திலிருந்து வந்த ஆசிரியர் ராணி அம்மையாரின் வழிக்காட்டலில் தமிழ் எழுத்து ஒன்று கூட தெரியாத நான் கற்று தேர்ந்தேன். இதுவரை 33 ஆண்டுகளாக தமிழ்ப் பிரிவில் பணி புரிந்துள்ளேன். கடந்த 33 ஆண்டுகளிலும் தமிழ் மொழி பயிற்சியில் நான் ஈடுபட்டதோடு நேயர்களுடன் பழகி அவர்களிடமிருந்து உதவி பெற்றுள்ளேன். சாதாரண மொழி பெயர்ப்பாளர் என்ற நிலையிலிருந்து பேராசிரியராகவும் தமிழ் பிரிவின் தலைவராகவும் வளர்ந்துள்ளேன். தமிழ்ப் பணி துவக்கத்தில் நான் இசை நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்றேன். நாட்கள் செல்ல செல்ல பல்வகை சிறப்பு நிகழ்ச்சிகளை மொழிபெயர்த்து தயாரிக்கும் பணியில் பங்கெடுத்தேன்.

1990 ஜுன் திங்கள் முதல் 91ம் ஆண்டு ஜுன் திங்கள் வரை தமிழ் நாட்டிலுள்ள தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு பெறும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. அந்த ஓராண்டு மேற்படிப்பின் போது அனைத்து வாய்ப்புகளையும் இறுகபற்றி தமிழ் மக்களுடன் நட்பாக பழகினேன். இராமசாமி, சுப்பிரமணியன் முதலிய பேராசிரியர்களிடமிருந்து தமிழ் அறிவு நிரம்பவே பெற்றேன். நான் தலைசிறந்த மதிப்பெண் வாங்கியதை பாராட்டும் வகையில் தஞ்சாவூர் பல்கலைக்கழகம் சீனாவிலிருந்து மேற்படிப்பு பெற்ற இருவருக்கு பட்டம் வழங்கும் விழா நடத்தியது.

அது அப்பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு மாணவர்களுக்கான பயிற்சி வரலாற்றில் முதல் முறையாகும். அந்த பெருமை சீனாவையே சாரும் என்பது குறிப்பிடதக்கது. அந்த ஓராண்டு மேற்படிப்பில் பெற்ற சாதனை எனது எதிர்கால தமிழ் இலட்சியத்தின் வளர்ச்சிக்கு முக்கிய அடிப்படை இட்டது. பின் 1997, 1999, 2002, 2003, 2006ம் ஆண்டுகள் அடுத்தடுத்து அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு நேயர்களுடன் நன்றாக பழகினேன். தமிழகத்தில் இருந்த போது முக்கிய செய்தியேடுகளுக்கு பேட்டி அளித்தேன். தொலைக்காட்சி நிலையத்தில் சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சியில் பங்கு கொண்டேன். அந்நிகழ்ச்சியை பார்த்தவர்களுடன் பழகி நேரடியாக அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தேன்.

இப்போது நட்பு பாலம், கேள்வியும் பதிலும் ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் நேயர்களுக்கு சேவை புரிந்து வருகினேன். நட்பு பாலம் நிகழ்ச்சியில் தமிழ் பேசும் பலரை பேட்டி கண்டுள்ளேன். பல நண்பர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களிடமிருந்து ஆலோசனை பெற்று வருகின்றேன். நிகழ்ச்சிகளில் சீர்திருத்தம், புதிய வகை நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவது போன்ற ஆலோசனைகளை என்னிடம் நேரடியாக முன்வைக்கலாம் என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றேன். மிக்க நன்றி.