அன்பான நண்பர்களே, வணக்கம்!நான் கலைமகள்.
1995ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை, பெய்ஜிங் ஒலிபரப்பு கல்லூரியில் தமிழ் மொழி படித்தேன். இப்பொழுது, அது, சீன செய்தித்தொடர்பு பல்கலைக்கழகம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பண்டைக்காலப் பண்பாட்டையும் நாகரிகத்தையும் விரும்பியதே, நான் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வதற்கான காரணமாகும். பட்டம் பெற்ற பின், சீன வானொலி நிலைய தமிழ்ப் பிரிவில் சேர்ந்து, செய்தியாளராகவும், அறிவிப்பாளராகவும், மொழிப் பெயர்ப்பு, நிகழ்ச்சி தயாரிப்பு முதலிய பணிகளில் ஈடுபட துவங்கினேன்.
2003 மற்றும் 2004ம் ஆண்டுகளில் அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 15, 16வது கருத்தரங்குகளில் நான் கலையரசியுடனும், வாணியுடனும் கலந்து கொண்டுள்ளேன். நேயர்களின் உளமார்ந்த அன்பும், எங்களுக்கான உறுதியான ஆதரவும் என் மனதில் ஆழப்பதிந்துள்ளன. அதிகமான தமிழ் நண்பர்களை அறிந்துகொண்டு, நேயர்களுடன் நேரடியாக கருத்துக்களைப் பரிமாறிகொண்டமை, எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது.
தற்போது, தமிழ்ப் பிரிவில் துணைத் தலைவராக, நான் தமிழ் இணையதளத்தின் பணிக்கு முக்கியமாக பொறுப்பேற்கிறேன்.
|