வணக்கம் நண்பர்களே, நான் வாணி. சீனப் பெயர் Cai Jun (சாய் ஜுங்). தற்போது தமிழ்ப் பிரிவில் துணைத் தலைவராக பணி புரிகின்றேன்.
1990ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை பெய்ஜிங் ஒலிபரப்பு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி படித்தேன். பீ லூசா, எஸ்.சுந்தரன், ந.கடிகாசலம் ஆகியோர் என்னுடைய ஆசிரியர்கள். பட்டம் பெற்ற பின், சீன வானொலி நிலைய தமிழ்ப் பிரிவில் அறிவிப்பாளராகவும், மொழிப் பெயர்ப்பாளராகவும் பணி புரியத் தொடங்கினேன்.
2003ஆம் ஆண்டு, செப்டெம்பர் முதல் 2004ஆம் ஆண்டு மே வரை, மேற்படிப்புக்காக தில்லி பல்கலைக்கழகத்தின் இக்கால இந்திய மொழி மற்றும் இலக்கியத் துறையில் பயின்றேன். டாக்டர் C. ரவீந்திரன், டாக்டர் ராஜகோபால், டாக்டர் மாரியப்பன் ஆகியோரின் உதவியுடன் தமிழகத்தைப் பற்றியும், தமிழ் மொழி பற்றியும் மேலும் நன்றாக அறிந்து கொண்டு, முதுநிலை பட்டையத்தைப் பெற்றேன்.
2004ஆம் ஆண்டு அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 16வது கருத்தரங்கிலும் 2007ஆம் ஆண்டு 19வது கருத்தரங்கிலும் கலந்து கொண்டேன்.
1995ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஐ.நாவின் 4வது உலக மகளிர் மாநாடு, 2001ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக பல்கலைக்கழக மாணவர் விளையாட்டுப் போட்டி முதலிய முக்கிய நிகழ்ச்சிகளையும், சீனாவிலுள்ள முன்னாள் இந்திய தூதர் சிவசங்கர் மேனன் உள்ளிட்ட பிரமுகர்களையும் பேட்டி கண்டேன்.
இந்திய பாடல், இசை, நடனம், ஆடை ஆகியவற்றை மிகவும் விரும்புகின்றேன். வானொலி பணியின் மூலம் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களுடன் நண்பர்கள்ளதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
|